Advertisement

தமிழர்களுக்கான அதிகார பகிர்வு: இலங்கை அதிபரிடம் வலியுறுத்தல்

Audio இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

கொழும்பு-இலங்கையில், தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கும் ௧௩வது சட்ட திருத்தம் குறித்து, அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கேயிடம் பேச்சு நடத்திய, நம் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளீதரன், அச்சட்டத்தை விரைவில் அமல்படுத்தும்படி வலியுறுத்தினார்.

நம் அண்டை நாடான இலங்கையில் நேற்று முன்தினம் ௭௫வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில், நம் நாட்டின் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.முரளீதரன் பங்கேற்றார்.

அன்று மாலை, அமைச்சர் முரளீதரன், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேயை சந்தித்து பேசினார்.

இது குறித்து இலங்கை அதிபர் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:

இலங்கையில் வசிக்கும் சிறுபான்மை தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கும் ௧௩வது சட்ட திருத்தத்தின் நிலை குறித்து, இந்திய அமைச்சர் முரளீதரன், இலங்கை அதிபரிடம் கேட்டறிந்தார்.

இவர்களது பேச்சு, ௧௩ஏ சட்ட திருத்தம் மற்றும் இலங்கையில் நல்லிணக்கத்தை மையமாகக் கொண்டே அமைந்திருந்தது.

அப்போது, முரளீதரன் இந்த சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தும்படி வலியுறுத்தினார்.

சுதந்திர தின விழாவின் தொடர்ச்சியாக, இலங்கையில் உள்ள இந்திய துாதர் கோபால் பக்லே, மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்ட, ௫௦ பஸ்களை வழங்கினார்.

இலங்கையின் புறநகர் பகுதிகளில் போக்குவரத்தை மேம்படுத்த, இந்தியா நன்கொடையாக ௫௦௦ பஸ்கள் வழங்குகிறது.

அதில், இத்துடன் ௧௬௫ பஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பஸ்கள் மார்ச் மாதத்துக்குள் வழங்குவதாக இந்தியா தெரிவித்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



வாசகர் கருத்து (5)

  • shyamnats - tirunelveli,இந்தியா

    மோடி தலைமையிலான மத்திய அரசு ஏதாவது செய்தால்தான் உண்டு. 40 எம் பீ களோடு கான் கிராஸ் அரசில் முக்கிய பங்கு வகித்தபோதே ஏதும் செய்யாத , தி மு க அரசு , இனிமேலும் நல்லது செய்யும் என்று இன்னும் நம்புவது மடமையாகும்.

  • சீனி - Bangalore,இந்தியா

    இலங்கையின் இறையாண்மையை பாதுகாக்க, தமிழர்களுடன் அதிகார பகிர்வு மட்டுமே ஒரே வழி. இல்லையெனில், இனக்கலவரத்தில் மீண்டும் சிரழிய வாய்ப்புள்ளது. இது இண்டர்நெட்யுகம், தமிழர்கள் நினைத்தால் பணம் அனுப்பாமல், இலங்கை பொருளாதாரத்தை அதல பாதாளத்துக்கு கொண்டு சென்று விடுவார்கள்.

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    மயிலே, மயிலே என்றால் இறகு போடுமா? இவர்களுக்கு நல்ல முறையில் சொன்னால், நடக்குமா?

    • Mohan - COIMBATORE,இந்தியா

      இவ்ளோ பெரிய நாடு உலகம் போற்றும் தலைவர், ஆளுமை மிக்கவர் வெறும் வற்புறுத்தல் அப்டினா வேற ஏதாவதுல சிரிச்சிட்டு போயிருவாங்க.. ஒழுக்கமா குடுக்க போரிய இல்லியா அப்டினு வலுக்கட்டாயமா பேசணும் ..என்னைக்குமே அந்த நாடு நமக்கு எதிரி தான் ...வெக்கவேண்டிய இடத்துல வெக்கணும் ...

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    பல பகுதிகளிலிருந்து எதிர்ப்பு வரும். அதை மீறி கொடுத்தால் தமிழர்களின் நலம் பாதுகாக்கப்படும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement