குஜராத் பெருமையை விளக்கும் பாரத் கவுரவ் டீலக்ஸ் ரயில்
இந்த செய்தியை கேட்க
புதுடில்லி,-குஜராத்தின் பாரம்பரிய பெருமைகளை விளக்கும் வகையில் 'ஏசி' வசதியுடன் கூடிய சொகுசு 'டீலக்ஸ்' ரயிலை, ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்ய உள்ளது.
நம் நாட்டின் பாரம்பரியத்தை எடுத்துக் காட்டும் வகையில் அவ்வப்போது சிறப்பு ரயில்களை இந்திய ரயில்வே இயக்கி வருகிறது.
இந்த வகையில், குஜராத் மாநிலத்தின் கலாசாரம் மற்றும் ஆன்மிக பெருமைகளை எடுத்துரைக்கும் வகையில், 'பாரத் கவுரவ் டீலக்ஸ்' சுற்றுலா ரயில் இந்த மாதம் அறிமுகம் செய்யப்படுகிறது.
இந்த சுற்றுலா ரயிலின் பயணம், வரும் 28ல் புதுடில்லி சப்தர்ஜங் ரயில் நிலையத்தில் துவங்குகிறது.
நான்கு முதல் வகுப்பு 'ஏசி' பெட்டிகள், இரண்டு இரண்டாம் வகுப்பு 'ஏசி' பெட்டிகள், ஒரு சமையலறை, இரண்டு உணவகங்கள் இந்த ரயிலில் இடம்பெற்றிருக்கும்.
குறைந்தது 156 பேர் பயணிக்கும் வகையில், பாரத் கவுரவ் டீலக்ஸ் ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எட்டு நாட்கள் பயணத்தில் குஜராத்தில் உள்ள முக்கிய புனித பாரம்பரிய தளங்களை காண முடியும்.
அங்குள்ள ஒற்றுமை சிலை, சோம்நாத், துவாரகா, நாகேஷ்வர், ஆமதாபாத், மோதேரா மற்றும் படான் ஆகிய இடங்களுக்கு இந்த ரயில் செல்கிறது.
வாசகர் கருத்து (12)
If our friend has any evidence why cannot he submit in the court insead of writing adverse comment about 2G?
2 ஜி அப்பீலை உயர்நீதிமன்றம் பல மாதங்களாக ஒத்திப் போடுகிறது.🙃 குற்றவாளிகளுக்கு மகிழ்ச்சி.
நீதி மீதி இதுவே சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஆளுநர் போட்ட அவதூறு வழக்கை இன்னும் எடுக்கவில்லை.இது அதிகார துஷ்ப்ரயோகம். கேட்பாரில்லை. மத்திய அரசு நீதிகளுக்கு கட்டுப்பாடுகளை சட்டமாக இயற்ற வேண்டும்.
புல்லட் ரயில் ஆமை வேகத்தில் வருவதற்கு வாய்ப்பு உள்ளது .
இந்தியா பொருளாதாரத்தில் மிக வலிமையாக இருந்தாலும் ஒரு ஏழை நாடு ,பல மாநிலங்களில் சாதாரண மற்றும் ஏழை மக்கள் பயணம் செய்யும் பாசஞ்சர் ரயில்கள் ,விரைவு ,மற்றும் அதி விரைவு ரயில்கள் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப போதுமானதாக இயக்கப்படவில்லை . இந்த லட்சணத்தில் குஜராத் மாநிலத்தின் பெருமையை பீத்திக் கொள்ள பல நூறு கோடிகள் செலவில் ஒரு சொகுசு ரயில் தற்போது தேவையா.... மக்களை ஏமாற்றிப் பிழைப்பை நடத்துபவர்கள்தான் அங்கு மிக அதிகம் .
புல்லட் டிரெயின், புல்லட் டிரெயின்னு ஒண்ணு வரும்ன்னு சொன்னாங்களே, அது எங்கேன்னு உங்களுக்காவது தெரியுமா?
வரி ஏய்ப்பு, வங்கி மோசடி, பங்குசந்தை திருட்டுத்தனம், வராக்கடன் திட்டம் இவற்றுள் குஜராத்தியர்தான் முதலிடம் என்பதையும் குறிப்பிடலாமே.
அதை புல்லட் டிரெயினில் போடுவாங்களோ என்னமோ..
விஞ்ஞான ஊழல் 2ஜியை அவர்களால் எக்காலத்திலும் மிஞ்ச முடியாது
வாரா கடன் கொடுத்தது யார் ....முதலில் தண்டிக்க வேண்டும்.
கடன் கொடுத்தது என்னவோ காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இருக்கலாம்.
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
இது ஒன்றும் இலவச ரயில் இல்லை. சுற்றுலாப் பயணிகளிடம் கூடுதல்🤔 சொகுசு கட்டணம் வசூலித்துதான் பயணம். அரசுக்கு வருமானம். நம் மாநிலத்திலும் வேண்டுமானால் வேண்டுகோள் விடுக்கலாம்.