விசைத்தறி கூலி உயர்வு: பேச்சுவார்த்தை தோல்வி
குமாரபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு ஒப்பந்தம், 7 ஆண்டுக்கு முன் போடப்பட்டது. கலெக்டர் முன்னிலையில், 3 ஆண்டுக்கு ஒருமுறை கூலி உயர்வு ஒப்பந்தம் போடப்படும் என, ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் கூட்டு விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் என, முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
ஆனால், 7 ஆண்டுகள் கடந்து இதுவரை கூலி உயர்வு வழங்கப்படவில்லை. தற்போது ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு அடிப்படையில், 75 சதவீத கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி விசைத்தறி தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. தாசில்தார் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு அழைத்து தீர்வு காண வேண்டும் என, விசைத்தறி தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதன்படி, நேற்று தாசில்தார் சண்முகவேல் தலைமையில், அடப்பு தறி உரிமையாளர்களுடன் கூலி உயர்வு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதுகுறித்து, தாசில்தார் சண்முகவேல் கூறியதாவது:
விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு குறித்த முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு ஏற்படுத்த கேட்டுக்கொண்டனர். அடப்பு தறி உரிமையாளர்களுடன் கூலி உயர்வு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஜவுளி உற்பத்தியாளர்கள் எங்களுக்கு கூலி உயர்வு கொடுத்தால் நாங்கள் கொடுக்கிறோம் என்றனர். பிப்., 8ல் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!