Advertisement

நாமக்கல்லில் முட்டை பவுடர் உற்பத்தி தொழிற்சாலை: அரசுக்கு கோழிப்பண்ணையாளர்கள் கோரிக்கை

நாமக்கல்: 'நலிவடைந்து வரும் கோழிப்பண்ணை தொழிலை பாதுகாக்க, நாமக்கல் பகுதியில், முட்டை பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை துவக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கோழிப்பண்ணையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நாமக்கல் பகுதியில், தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம், முட்டை கோழிப்பண்ணையாளர்கள் பெடரேசன், முட்டை கோழிப்பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி என, பல்வேறு கோழிப்பண்ணையாளர்கள் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த மாதம், ஒரு முட்டை கொள்முதல் விலை, 565 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. அதையடுத்து, படிப்படியாக விலை குறைந்து, தற்போது, 460 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (நெக்), கொள்முதல் விலையை, 460 காசாக நிர்ணயம் செய்தபோதும் வியாபாரிகள், 400 காசுக்கு குறைவாகவே, பண்ணைகளில் கொள்முதல் செய்கின்றனர்.

அதனால், முட்டைவிலை பெரும் சரிவை சந்தித்து, இரண்டு வாரமாக, நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப்பண்ணையாளர்களுக்கு, தினமும், 5 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. இந்நிலையில், எந்த சங்கத்தையும் சேராத கோழிப்பண்ணையாளர்களின் கூட்டம், நாமக்கல்லில் நேற்று நடந்தது. அதில், ஏராளமான கோழிப் பண்ணையாளர்கள் பங்கேற்று, தற்போதைய நிலை குறித்து விவாதித்தனர். அப்போது, கடந்த சில ஆண்டுகளாக, கோழிப்பண்ணை தொழில் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. முட்டை விற்பனை விலையில், ஏராளமான குளறுபடிகள் உள்ளன. 'நெக்' அறிவிக்கும் விலையைவிட குறைந்த விலையிலேயே முட்டைகளை வியாபாரிகள் வாங்குகின்றனர்.
முட்டை விலையில், 'மைனஸ்' என்பதே இருக்க கூடாது. தீவன மூலப்பொருட்கள் விலையும், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முட்டை விலையை, உற்பத்தி செலவின் அடிப்படையில் நிர்ணயம் செய்ய வேண்டும். 'நெக்' மண்டல வாரியாக விலை நிர்ணயம் செய்வதை தவிர்த்து, நாடு முழுவதும் ஒரே விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்தபட்ச விலையாக, ஒரு முட்டை பண்ணை கொள்முதல் விலை, 550 காசாக நிர்ணயம் செய்ய வேண்டும். முட்டை விலையை, தினமும் நிர்ணயம் செய்ய வேண்டும். முட்டையில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் முட்டை பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலையை, நாமக்கல் பகுதியில் அமைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு பலரும் தங்களது கருத்துக்களை கொட்டித்தீர்த்தனர்.
தொடர்ந்து, நாமக்கல் பகுதியை சேர்ந்த கோழிப்பண்ணையாளர் சத்திய மூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:
கோழிப்பண்ணையாளர்களுக்கு, தினமும் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது. முட்டை விற்பனையில் கடும் நஷ்டத்தை சந்தித்து கொண்டிருக்கிறோம். முட்டையின் அடக்க விலையை விட, விற்பனை விலை மிகவும் குறைவாக உள்ளது. அதன் காரணமாக, தினமும், கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டு, கோழிப்பண்ணை தொழில் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு (நெக்) முட்டை விலையை, தினமும் நிர்ணயம் செய்து, நாடு முழுவதும் ஒரே விலையாக அறிவிக்க வேண்டும். அனைத்து பண்ணையாளர்களின் கருத்துக்களை நடைமுறைப்படுத்த வேண்டும். நலிவடையும் நிலையில் உள்ள கோழிப்பண்ணை தொழிலை பாதுகாக்க, அனைத்து பண்ணையாளர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement