மாமியார் வீட்டுக்கு தீ வைத்த மருமகன்
திருவண்ணாமலை:திருவண்ணாமலை, மேற்கு கோபுர தெருவைச் சேர்ந்த ராஜகிரி - மஞ்சுளாதேவி மகள் வினோதினி, 30; திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் சுரேஷ், 35; இருவருக்கும், 2013ல் திருமணமானது. தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார்.
கருத்து வேறுபாடால், கணவனை பிரிந்து தாய் வீட்டில் வினோதினி வசிக்கிறார். கடந்த மாதம், 28ல் மாமியார் வீட்டிற்கு சென்ற சுரேஷ், வினோதினி, மஞ்சுளாதேவி ஆகியோரை தாக்கினார்.
இதனால், தங்கள் வீட்டை பூட்டிக்கொண்டு, அவர்கள் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர். ஆத்திரமடைந்த சுரேஷ், உறவினர்களுடன் சென்று மாமியார் வீட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்தார்.
பொருட்களை அடித்து நொறுக்கி, வீட்டுக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்.
இது குறித்த புகார்படி, திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிந்து, சுரேஷ் உள்ளிட்ட மூன்று பேரை தேடி வருகின்றனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!