சிறுத்தைகள் நடமாட்டம் குடியாத்தம் பகுதியில் பீதி
வேலுார் மாவட்டம், குடியாத்தம் அருகே, கல்லப்பாடி, தனகொண்டபல்லி, சைனகுண்டா, மோர்த்தானா, கொட்டார மடகு என, 20க்கும் மேற்பட்ட கிராமங்கள், தமிழகம் - ஆந்திரா மாநில எல்லையில் உள்ளன.
கடந்தாண்டு நவம்பரில், கல்லப்பாடி முதலியார் ஏரி, கொட்டாளம் செக் போஸ்ட் ஆகிய பகுதிகளில் தலா இரண்டு சிறுத்தைகள் நடமாட்டத்தால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.
குடியாத்தம் வனத்துறையினர், அவற்றை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். உப்பரபள்ளி கிராமத்தில், தட்சிணாமூர்த்தி என்பவருக்கு சொந்தமான பசு மாட்டை கடந்த மாதம் 26ல் சிறுத்தை அடித்துக் கொன்றது.
வனத்துறை விசாரணையில், ஆந்திரா மாநிலம், சித்துார் வனப்பகுதியிலிருந்து, ஆறு ஜோடி சிறுத்தைகள் குடியாத்தம் சுற்றியுள்ள வனப்பகுதிக்கு வந்துள்ளன என தெரிந்தது.
எனவே, வனப்பகுதிக்குள் மேய்ச்சலுக்கு கால்நடைகளை ஓட்டிச் செல்ல வேண்டாமென, அப்பகுதி மக்களை வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில், தட்டம்பாறை அருகே ஊத்துமலை பகுதியைச் சேர்ந்த சீனிவாசனுக்கு சொந்தமான பசு மாட்டை, நேற்று முன்தினம் இரவு, சிறுத்தைகள் அடித்துக் கொன்றன. இதனால், குடியாத்தத்தை ஒட்டிய, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பீதியில் துாக்கத்தை இழந்து தவிக்கின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!