கோவில் நகை அறிக்கை வெளியிடணும்!
திருப்பத்துார்:''கொள்ளையர்களிடமிருந்து மீட்கப்பட்ட சுவாமி சிலைகளை, அந்தந்த கோவில்களிலேயே மீண்டும் வைத்து வழிபட வேண்டும்,'' என, முன்னாள் போலீஸ் ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் கூறினார்.
திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடியில் உலக சிவனடியார்கள் சங்க அடையாள அட்டை வழங்கும் விழாவில் பங்கேற்ற அவர், நிருபர்களிடம் கூறியதாவது:
திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடியில் உலக சிவனடியார்கள் சங்க அடையாள அட்டை வழங்கும் விழாவில் பங்கேற்ற அவர், நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகம் முழுதும் உள்ள கோவில்களில், சிலைகளை பாதுகாப்பதற்காக, பாதுகாப்பு அறைகள் கட்ட, தமிழக அரசு, 340 கோடி ரூபாய் ஒதுக்கிஉள்ளது.
ஆனால், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்களில், பாதுகாப்பு அறைகள் இன்னமும் கட்டப்படவில்லை. ஒரே ஒரு கோவிலில் மட்டும் சிலை பாதுகாப்பு அறை கட்டப்பட்டு, அதுவும் பயன்படுத்தப்படாமல் உள்ளது.
தமிழகம் முழுதும் உள்ள பழமையான கோவில்களில், பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் உள்ளன. அதன் விபரங்களை, அரசு அறிக்கையாக வெளியிட வேண்டும்.
கோவில்களிலிருந்து கடத்தப்பட்டு, மீட்கப்பட்ட சிலைகளை, மீண்டும் அந்தந்த கோவில்களிலேயே வைக்க வேண்டும்; பக்தர்கள் வழிபடச் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!