கல்வி அதிகாரியிடம் மொபைல் திருடியவர் கைது
திருப்பத்துார்: திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு நல்ல தண்ணீர் குளம் பகுதியை சேர்ந்தவர், ஏகானந்தம். இவர் சேலம் மாவட்டம், ஏற்காடு அடுத்த போத்தனுாரில் கல்வி அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த மாதம் 27 ம் தேதி பள்ளிப்பட்டுக்கு சென்று விட்டு அங்கிருந்து 29ம் தேதி இரவு சேலம் செல்ல ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார்.
திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டைக்கு ரயில் வந்த போது அவர் சட்டை பாக்கட்டில் வைத்திருந்த மொபைல் போன் திருட்டு போனது தெரியவந்தது.
புகார்படி ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து, அரக்கோணத்தை சேர்ந்த சங்கர், 34, என்பரை இன்று கைது செய்து மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!