Advertisement

மீட்கப்பட்ட சிலைகளை சம்மந்தப்பட்ட கோவில்களிலேயே நிறுவ வேண்டும்: பொன்., மாணிக்கவேல்

திருப்பத்துார்: கொள்ளையர்களிடமிருந்து மீட்கப்பட்ட சிலைகளை சம்மந்தப்பட்ட கோவில்களிலேயே நிறுவ வேண்டும் என முன்னாள் ஐ.ஜி., பொன். மாணிக்கவேல் கூறினார்.

திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடியில், உலக சிவனடியார்கள் சங்க அடையாள அட்டை வழங்கும் விழா நடந்தது. இதில் பங்கேற்ற பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் சிலைகளை பாதுகாப்பதற்காக பாதுகாப்பு அறைகள் கட்ட தமிழக அரசு 340 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. ஆனால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்களில் பாதுகாப்பு அறைகள் இன்னமும் கட்டப்படவில்லை.

ஒரே ஒரு கோவிலில் மட்டும் சிலை பாதுகாப்பு அறை கட்டப்பட்டு அது பயன்படுத்தப்படாமல் உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள பழமையான கோவில்களில் பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் உள்ளன. அதன் விரங்களை அரசு அறிக்கையாக வெளியிட வேண்டும். கோவில்களிலிருந்து கடப்பட்டு மீட்கப்பட்ட சிலைகளை மீண்டும் சம்மந்தப்பட்ட கோவில்களிலேயே நிறுவ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement