கொலை வழக்கில் ஆயுள் தண்டனை
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியை சேர்ந்தவர் சுபாஷ் 26. நண்பர் தினேஷ் 21 . 24.1.2013 அன்று முன் விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த வசந்த் 24, உட்பட நான்கு பேர் சேர்ந்து சுபாஷை கத்தியால் குத்தினர். தடுக்க முயன்ற தினேசுக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதில் சுபாஷ் இறந்தார். தினேஷ் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தார் .
பூதப்பாண்டி போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் , வசந்துக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகர்கோவில் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி ஜோசப் ஜாய் தீர்ப்பளித்தார். மற்ற மூன்று பேரும் விடுவிக்கப்பட்டனர்.
பூதப்பாண்டி போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் , வசந்துக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகர்கோவில் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி ஜோசப் ஜாய் தீர்ப்பளித்தார். மற்ற மூன்று பேரும் விடுவிக்கப்பட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!