மாணவி நான்கு மாத கர்ப்பம்; மந்திரவாதி கைது
நாகர்கோவில்: எட்டாம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய மந்திரவாதியை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில் அருகே பள்ளிவிளையை சேர்ந்த தொழிலாளி ஒருவர் தனது மனைவி அடிக்கடி உடல்நலக்குறைவால் பாதிக்கப்படுவது பற்றி வடசேரி மேலகலுங்கடியை சேர்ந்த மணிகண்டன் என்ற மந்திரவாதியை சந்தித்துள்ளார். தொழிலாளி வீட்டுக்கு சென்ற மணிகண்டன் சில பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
அவரது வீட்டுக்கு அடிக்கடி சென்ற மணிகண்டன் தொழிலாளியின் மகளான எட்டாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
வயிற்று வலியால் அவதிப்பட்ட மகளை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அவர் நான்கு மாத கர்ப்பிணியாக இருப்பதை டாக்டர்கள் உறுதி செய்தனர். விசாரணையில் வீட்டுக்கு வந்த மந்திரவாதி மணிகண்டன் தன்னை பலாத்காரம் செய்ததையும், வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டியதையும் மாணவி கூறினார்.
நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் மணிகண்டனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!