Advertisement

யாத்திரை நிறைவு: காஷ்மீரில் காங்கிரஸ் அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றினார் ராகுல்

Audio இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: காஷ்மீரின் மவுலானா ஆசாத் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வைத்து தேசியக்கொடியை இன்று(ஜன.,30) ராகுல் ஏற்றினார். இத்துடன் யாத்திரையை ராகுல் நிறைவு செய்தார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், லோக்சபா எம்.பி.,யுமான ராகுல், தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஒற்றுமை யாத்திரை என்ற நடைப்பயணத்தை கடந்த ஆண்டு செப்., 7ல் துவங்கினார். தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, டில்லி, உத்தர பிரதேசம், பஞ்சாப், ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தை கடந்து ஜம்மு - காஷ்மீர் வந்தடைந்தது.

இந்நிலையில், காஷ்மீரின் மவுலானா ஆசாத் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வைத்து தேசியக்கொடியை இன்று(ஜன.,30) ராகுல் ஏற்றினார். இத்துடன் யாத்திரையை ராகுல் நிறைவு செய்தார். பாதுகாப்பு காரணங்களுக்காக, ஜம்மு - காஷ்மீரில் பொது இடத்தில் வைத்து தேசியக்கொடியை ஏற்ற ராகுலுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

கட்சியின் பொதுக்கூட்டம்:




காஷ்மீரில் இன்று பொதுக்கூட்டத்தில் பங்கேற்குமாறு 21 எதிர்க்கட்சிகளுக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே அழைப்பு விடுத்து, சில தினங்களுக்கு முன் கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் இன்று பொதுக்கூட்டத்தில், திமுக, தேசியவாத காங்கிரஸ், ராஷ்டீரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், சிவசேனாவின் உத்தவ் தாக்ரே அணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், கேரளா காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய 12 எதிர்க்கட்சிகள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல் திரிணமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பதாக கூறப்படுகிறது.



வாசகர் கருத்து (9)

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    தைரியமாக காஷ்மீரில் ராகுல், காங்கிரஸ்காரர்கள் நடமாட யார் காரணம்? பாஜக ஆட்சி அல்லவா? இதையெல்லாம் இந்த அறிவீலிகள் எப்படி உணர்வார்கள்?

  • VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா

    இப்படி கொடி ஏற்றும் நிலைமையை ஏற்படுத்தி கொடுத்தவர்கள் மோடி அமித்ஷா பாஜக. காங்கிரஸ் இருந்திருந்தால் இது முடியுமா

  • sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா

    காஷ்மீரில் பப்பு காலை எடுத்துவைக்கவும் நடைப்பயணம் மேற்கொள்ளவும் லால் சவுக்கில் தேசியக்கொடி பதட்டம் இல்லாமல் ஏற்றவும் சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுத்ததே மோடி அவர்களின் அரசுதான் இல்லை என்று சொல்ல யாராலும் முடியுமா?

  • S.Balakrishnan -

    At last some way or other Rahul completed his Yatra. Well and good. What next ?Which country ? Which hotel ?Great question hangs in front of his fellow partymen ?Long live Rahul happily in his favourite hotel !Jaihind.

  • ram - mayiladuthurai,இந்தியா

    இவர்கள் ஆட்சி செய்த பொது, இவர்களால் சுதந்திரம் மற்றும் குடிஅரசு தினத்தன்று கூடகொடி ஏத்த முடியாமல் திணறினார்கள், இப்போது வெட்கமே இல்லாமல் சுய விளம்பரம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement