தமிழர்களைத் தாக்கிய வட மாநில தொழிலாளர்கள்: இருவருக்கு ‛ காப்பு
இந்த செய்தியை கேட்க

திருப்பூர், அனுப்பர்பாளையம், திலகர் நகரில் உள்ள பனியன் நிறுவனங்களில் ஏராளமான வட மாநிலத்தினர் பணிபுரிகின்றனர்.சில நாட்களுக்கு முன், 'தமிழர்களை வட மாநிலத்தினர் அடித்து விரட்டுகின்றனர்' என்பது போன்ற 'வீடியோ' சமூக வலைதளங்களில் பரவியது.
இதையடுத்து, போலீசார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது போலீசார் தரப்பில் கூறுகையில், வட மாநிலத்தவருக்கும், இப்பகுதியை சேர்ந்தவர்களுக்கும் டீக்கடையில் ஏற்பட்ட மோதல் தான் காரணம் என, விசாரணையில் தெரியவந்தது.
திருப்பூர் போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் கூறியதாவது: அனுப்பர்பாளையத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக, தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது. தற்போது, எவ்வித பிரச்னையும் இல்லை. அந்த வீடியோவை யார் எடுத்தது; அதை பகிர்ந்தவர்கள் யார் என்பது என, சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர் எனக் கூறியிருந்தார்.
கைது:
இந்நிலையில், இது தொடர்பாக விசாரித்த வேலம்பாளையம் போலீசார், பீஹாரை சேர்ந்த ரஜட்குமார், 26 மற்றும் பரேஷ்ராம், 27 ஆகிய இருவரை இன்று(ஜன.,30) கைது செய்தனர்.
இவர்கள் மீது 147 (சட்டவிரோதமாக ஒன்று கூடுதல்), 148 (ஆயுதங்களுடன் ஒன்று கூடுதல்), 294(பி)- பொது இடத்தில் அவதூறாக பேசி பிரச்னை ஏற்படுத்துதல் ஆகிய, மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர். மேலும், மோதல் சம்பவத்தில் தொடர்புடைய தமிழக வாலிபர்கள் உள்ளிட்ட சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து (22)
இந்த கலவரத்தால், பயன்பெறபோவது சீமான் தான். இதை எப்படி ஊதி பெரிதாக்கி பலன்பெறலாம் என்று நாம் தமிழர்கள் மலையாளி சீமான் தலைமையில் பேசிவருகிறார்கள்.
ஆமாம் திமுகவிற்கு சொம்பு தூக்க ஆள் வேண்டும் எனவே பிரியாணி குவார்ட்டர் 200 கொடுத்து நம் இளைஞர்களை வேலைக்கு செல்லாமல் தடுத்து விட்டு இப்போது வட மாநிலத்தவர்கள் வந்து விட்டார்கள் என்று கூறி ஏமாற்றி வருகிறார்கள். நாம் ஒழுங்காக வேலை பார்த்தால் ஏன் அவர்கள் இங்கு வருகிறார்கள். திமுகவை நம்பினால் இப்படியே இருக்க வேண்டியதுதான். இளைஞர்கள் சிந்திக்க வேண்டும்
வட மாநில ஆட்கள் பாவம் டீக்கடையில் தகராறு செய்தார்கள். நம்மூரு ஆட்கள் டாஸ்மாக் பாரில் அடிதடி கொலை கூட செல்கிறார்கள். யார் 🤔பெட்டர்?
இந்தியாவிலேயே அதிகமாக வேலைவாய்ப்பு கொடுக்கும் நகரங்களில் திருப்பூர், ஈரோடு, சண்டிப்பூர் (மே, வ) இருக்கிறது,
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
இவங்க டாஸ்மார்க் தொழிலா வச்சுக்குவாங்க, எந்த பாக்டரியும் தமிழ் நாட்டுக்குள்ள உள்ள வர விடமாட்டாங்க, இப்படியா போன டாஸ்மார்க் டுமிழனக்கு கேக்றான் மேக்கிறான் கம்பெனில கூட வேலை கிடைக்காது ......