Advertisement

பிரதமரின் நடவடிக்கையால் தான் ராகுல் தேசியக்கொடி ஏற்றினார்: பா.ஜ.,

ஸ்ரீநகர்: பிரதமர் மோடி காஷ்மீரில் 370 சட்டப்பிரிவை ரத்து செய்து எடுத்த நடவடிக்கையால்தான் லால் சவுக் மணிக்கூண்டு அருகே காங்கிரஸ் எம்.பி., ராகுல் அமைதியான முறையில் தேசியக்கொடி ஏற்ற முடிந்தது என பா.ஜ., எம்பி.,க்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் எம்.பி., ராகுல், தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஒற்றுமை யாத்திரை என்ற நடைப்பயணத்தை கடந்த செப்.,7ல் துவக்கினார். தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, டில்லி, உத்தரபிரதேசம், ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசத்தை கடந்து ஜம்மு-காஷ்மீர் வந்தடைந்தது. இந்த யாத்திரை இன்று (ஜன.,30) பிரமாண்ட பொதுக்கூட்டத்துடன் நிறைவு பெறுகிறது.

இதனையடுத்து காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக் பகுதியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க மணிக்கூண்டு அருகே தேசியக்கொடியை ஏற்றினார்.
இன்றைய பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக காஷ்மீரில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் தேசியக்கொடியை ஏற்றி யாத்திரையை முடிக்கிறார் ராகுல். லால் சவுக் மணிக்கூண்டு பகுதியில் மூவர்ண தேசியக்கொடியை ராகுல் ஏற்றியது தொடர்பாக பா.ஜ., எம்.பி., ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது:

பிரதமர் மோடி காஷ்மீரில் 370 சட்டப்பிரிவை ரத்து செய்ததால்தான் ராகுல் லால் சவுக்கில் அமைதியான முறையில் தேசியக்கொடியை ஏற்ற முடிந்தது. பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கையால் தான் ஜம்மு- காஷ்மீருக்கு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வந்தனர். காங்கிரஸ் ஆட்சியின் போது காஷ்மீரில் பயங்கரவாதமும் அச்சமும் இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

மற்றொரு பா.ஜ., எம்.பி., ராஜ்யவர்தன் ரத்தோர் கூறுகையில், 'லால் சவுக்கில் இந்திய குடிமகன் அனைவரும் மூவர்ணக் கொடியை ஏற்றக்கூடிய நிலையை மோடி அரசு உருவாக்கியுள்ளது' என்றார். ஜம்மு -காஷ்மீர் பா.ஜ., தலைவர் ரவீந்தர் ரெய்னா கூறுகையில், '70 ஆண்டுகளுக்குப் பிறகு, நேரு, -காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் ஸ்ரீநகரின் லால் சவுக்கில் மூவர்ணக் கொடியை ஏற்றியுள்ளார். அமைதி மற்றும் சகோதரத்துவத்தின் மத்தியில் ராகுல் தேசியக் கொடியை ஏற்றிய பெருமை பிரதமர் மோடிக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் உண்டு.' என்றார்.



வாசகர் கருத்து (12)

  • பேசும் தமிழன் -

    திரு மோடி அவர்களின் தலைமையிலான பிஜேபி நல்லாட்சிக்கு .... ராகுல் ...அதாவது பப்பு காஷ்மீர் பயணம் சரியான உதாரணம் ....மோடி அவர்களின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும் .....இதே பப்பு அவர்கள் (காங்கிரஸ்) ஆட்சியின் போது...காஷ்மீர் போவதை பற்றி நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார் .....370 என்ற இல்லாத ஒன்றை கூறி...காஷ்மீரை கெடுத்து குட்டிச்சுவராக்கி வைத்து இருந்தது காங்கிரஸ் கட்சி.

  • Unmai vilambi - Chennai,இந்தியா

    ராகுல் வின்சி நாடு முழுக்க பாதயாத்திரை சென்றதற்கு மோடியின் ஆட்சியில் ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு முன்னேற்றம் தான் காரணம்

  • கண்மணி கன்னியாகுமரி - தமிழ்நாடு,இந்தியா

    குஜராத்தில் ராகுல்காந்தியின் வேடமணிந்து நடந்து சென்றது

  • S.Balakrishnan -

    Rahul must thank Modi ji government for making him to reach Kashmir freely as a partyman and hoist the Indian National flag.

  • vinu - frankfurt,ஜெர்மனி

    அது சரி உங்க கூட்டாளி அதானி நாட்டையே சுரண்டி இருக்கிறான். அதை பற்றி கொஞ்சம் பேசு

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement