மண்டைக்காடு கோவில் திருவிழா கடைகள்: வாடகை வசூலில் ஈடுபடும் தேவாலயம்
இந்த செய்தியை கேட்க

இது குறித்து, ஹிந்து முன்னணி மாநில துணை தலைவர் ஜெயகுமார் கூறியதாவது:
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், தமிழகத்தை கடந்து கேரளாவிலும் புகழ் பெற்றது. இங்கு மாசி பெரு விழா பிரம்மாண்டமாக நடக்கும். பல மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர்.
மாசி மாதத்தில் 10 நாட்கள் நடக்கும் விழாவுக்கு, தை மாதத்தில் இருந்தே, மக்கள் அதிக எண்ணிக்கையில் வந்து செல்வர். இதனால், இந்த கோவிலை சுற்றி ஏராளமான கடைகள் அமைக்கப்படும்.
வாடகை வசூல்
மண்டைக்காட்டை ஒட்டி இருக்கும் புதுார் பகுதியில் கடற்கரை உள்ளது. மண்டைக்காடு கோவில் திருவிழாவுக்கு வருபவர்கள், கடலுக்கு சென்று நீராடுவர். அதனால், கடலோர பகுதிகளிலும் கடைகள் அமைக்கப்படும். இது காலம் காலமாக நடப்பது தான்.
கடலோர கடைகளில் வாடகை வசூலிக்க, மண்டைக்காடு புதுார் புனித லுாசியாள் தேவாலயத்தை சேர்ந்தவர்கள், குறிப்பிட்ட ஒருவருக்கு அனுமதி கொடுத்துள்ளனர். அவர் தேவாலயத்தில் லட்சக்கணக்கில் ரூபாய் செலுத்தி, கடைகளில் இருந்து வாடகை வசூலிக்கும் உரிமையை பெற்றுள்ளார்.
மேலும் அவர், பேரூராட்சி இடத்தில் கடை அமைக்க அனுமதி அளித்து, வாடகை வசூலிக்கிறார். இது சட்ட விரோதம்.
பேரூராட்சி இடத்தில் வாடகை வசூலிக்கும் உரிமை அளிக்க, தேவாலயத்துக்கு எந்த உரிமையும் கிடையாது. பேரூராட்சி நிர்வாகமும், இந்த விஷயத்தில் கண்டும் காணாமல் இருக்கிறது.
அனுமதி கட்டணம்
கடலோரத்தில் ஏராளமான மீனவ குடும்பங்கள் உள்ளன. அவர்களில் பெரும்பாலானோர் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் கடலில் மீன் பிடித்து வந்து, சிறு வியாபாரிகளுக்கு விற்பர்.சிறு வியாபாரிகள் கடல் ஓரத்திலேயே அமர்ந்து, மீன் வியாபாரத்தில் ஈடுபடுவர். அதற்காக, தேவாலயத்துக்கு சிறு தொகையை அனுமதி கட்டணமாக செலுத்தி வருகின்றனர். அதை, 'மகிமை கட்டணம்' என, சொல்கின்றனர்.
அப்படி ஒரு கட்டணமாக தான், பகவதி அம்மன் கோவில் திருவிழாவுக்காக அமைக்கப்படும் கடைகள், பேரூராட்சி இடத்தில் அமைக்கப்படும் கடைகளிடம் வசூல் செய்யப்படுகிறது. இதை அனுமதிக்க முடியாது.
பேரூராட்சி தலைவராக பா.ஜ.,வை சேர்ந்த மீனா ஜெயந்தி என்பவர் தேர்வாகியுள்ளார். இப்பிரச்னையை அவரிடம் கூறியுள்ளோம். அவரும் பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி, கலெக்டர் பார்வைக்கு எடுத்துச் செல்வதாக கூறியிருக்கிறார்.இவ்வாறு அவர் கூறினார்.
பேரூராட்சி தீர்மானம்
பேரூராட்சி தலைவர் மீனா ஜெயந்தி கூறியதாவது: மண்டைக்காடு என்பது கிறிஸ்தவர்கள், ஹிந்துக்கள் கலந்து வாழும் பகுதி. ஹிந்து முன்னணி எழுப்பியுள்ள பிரச்னை நியாயமானது.
பேரூராட்சி இடத்தில் வாடகை வசூலிக்க, தேவாலயம் சார்பில் யாரோ ஒருவருக்கு அனுமதி கொடுத்துள்ளனர். தவறு நடப்பது குறித்து, பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்றுவது என முடிவு எடுத்தோம். ஆனால், கடலோர பகுதியில் இருந்து தேர்வான இரண்டு கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பேரூராட்சி நிர்வாகத்துக்கு பொறுப்பாக இருக்கும் செயல் அலுவலர் கலாராணி என்பவரிடம் பிரச்னையை எடுத்துச் சென்றோம். அவர் நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுப்பதில் கவனமாக இருக்கிறார்.
பேரூராட்சிக்கு, ஆண்டுக்கு 56 லட்சம் ரூபாய் வரி வருவாய் வருகிறது. மண்டைக்காடு கோவில் விழாவுக்கு, பேரூராட்சி சார்பில், 30 லட்சம் ரூபாய் செலவு செய்கிறோம்.
விழா நேரத்தில் கடை வாடகை வசூல் வாயிலாக சில லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கலாம் என்ற சூழலில், சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டு தேவாலயம் சார்பில் பணம் வசூலிக்கின்றனர். நிச்சயம் இது தடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மகிமை கட்டணம்
புனித லுாசியாள் தேவாலயம் தரப்பில் கூறியதாவது:
இத்தனை ஆண்டு காலமாக இல்லாத ஒரு பிரச்னையை இப்போது கிளப்புகின்றனர். தேவாலயம் தரப்பில், மீனவர்களிடம் இருந்து மகிமை கட்டணம் மட்டும் தான் வசூலிக்கப்படுகிறது.
பா.ஜ.,வை சேர்ந்த ஒருவர் பேரூராட்சி தலைவர் பொறுப்புக்கு வந்த பின், தேவாலயம் மீது குற்றம் சுமத்தி, பிரச்னையை துாண்டி விட பார்க்கின்றனர்.
பேரூராட்சி தரப்பில் விளக்கம் கேட்டு 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளதாக தகவல் வந்தது. அவர்களுக்கு உரிய விளக்கம் கொடுக்கப்படும். இங்கிருக்கும் ஹிந்து, முஸ்லிம் மக்களுடன் இணைந்து, எப்போதும் போல் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதுதான் விருப்பம். அதற்கேற்ப செயல்படுகிறோம்.
இவ்வாறு தேவாலயம் தரப்பில் கூறப்பட்டது.
'நடவடிக்கை உறுதி!'
மண்டைக்காடு பேரூராட்சி செயல் அலுவலர் கலாராணி கூறியதாவது:பேரூராட்சி நிர்வாகம், 2004 ஆண்டு வரை, திருவிழா காலங்களில் வாடகை வசூலித்தது. அதன்பின் தொடர்ச்சியாக, புனித லுாசியாள் தேவாலயத்தை சேர்ந்தவர்கள் தான், வாடகை வசூலித்துள்ளனர். பழைய ஆவணங்களை பார்த்தேன். தொடர்ச்சியாக தவறு நடந்திருப்பது புலப்படுகிறது.தேவாலயத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விளக்கம் வந்ததும், நடவடிக்கை எடுக்கப்படும். கலெக்டரிடம் விபரம் தெரிவிப்பேன். எதுவாக இருந்தாலும், பேரூராட்சி நிர்வாகம் கவனமாக செயல்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
வாசகர் கருத்து (13)
கொள்ளையில் திமுக வுக்கு நிச்சயம் பங்கு இருக்கும் ..மனோ தங்கராஜ் இதற்கான ப்ரோக்கர் வேலை செய்வதால்தான் எம்எல்ஏ சீட் ....
இந்தியாவில் கிறிஸ்துவம் ஒரு வியாபார நிறுவனம். அவ்வளவே .
அது நியாயமாகாது
யாராலும் எந்த அமைப்பாலும் ஒன்றுமே செய்ய முடியாது , பாராட்டுக்கள், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் , வந்தே மாதரம்
மகிமை ரசீது ha ha ha