சென்னை-கடும் குளிர் காரணமாக பயணியர் வருகை குறைவாக இருந்ததால், ஆறு விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டன.
சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் செல்ல வேண்டிய, 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' விமானமும், இரவு 10:00 மணிக்கு மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டா செல்ல வேண்டிய 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' விமானமும் ரத்து செய்யப்பட்டன.
ஐதராபாத்தில் இருந்து நேற்று அதிகாலை 1:15 மணிக்கு சென்னை வர வேண்டிய, 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' விமானமும், கோல்கட்டாவில் இருந்து நேற்று அதிகாலை 1:15 மணிக்கு சென்னை வர வேண்டிய 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' விமானமும் ரத்து செய்யப்பட்டன.
இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து, 'ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்' விமானம், நேற்று அதிகாலை 2:00 மணிக்கு, சென்னைக்கு வந்து விட்டு, மீண்டும் சென்னையில் இருந்து அதிகாலை 3:15 மணிக்கு இலங்கைக்கு புறப்பட்டு செல்லும்.
அந்த இரு சேவைகளும் நேற்று ரத்து செய்யப்பட்டன.
இது குறித்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:
இரவு நேரம் கடுமையான குளிர் நிலவுகிறது. எனவே இரவு விமானங்களிலும், அதிகாலை விமானங்களிலும், பயணியர் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கிறது. இதனால், ஆறு விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
இவை அனைத்தும் பெரிய ரக விமானங்கள். அதற்குத் தகுந்த, பயணியர் எண்ணிக்கை இல்லாமல், மிகவும் குறைவாக இருக்கும் சூழ்நிலையில், விமானங்களை காலியாக இயக்க முடியாது. எனவே ரத்து செய்யப்படுகின்றன. அதே நேரத்தில், முன்பதிவு செய்த பயணியருக்கு மாற்று ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!