ADVERTISEMENT
மதுரை : பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் உண்ணாவிரதம் நடந்தது.
மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் லட்சுமி நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாநில தலைவர் சண்முகராஜன் பேசியதாவது: தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என வாக்குறுதி கொடுக்கப்பட்டது. அது நிறைவேற்றப்படவில்லை. அகவிலைப்படியை மத்திய அரசு அறிவித்த அந்த நாளில் இருந்து வழங்க வேண்டும். டாஸ்மாக் போன்றவற்றை நடத்தும் அரசு ஏன் மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்தக்கூடாது. கோரிக்கைகள் நிறைவேறும் வரை ஓய மாட்டோம், என்றார்.
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!