Advertisement

சேது சமுத்திர திட்டம் நிபுணர் குழு அமைக்கணும்

ADVERTISEMENT
கடலுார்,-''சேது சமுத்திர திட்டம் வேண்டுமா, வேண்டாமா என்பதை நிபுணர் குழு அமைத்து முடிவெடுக்க வேண்டும்,'' என, பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினரும், முன்னாள் தேசிய செயலருமான ஹெச்.ராஜா கூறினார்.

கடலுாரில், ஹிந்து மக்கள் கட்சி சார்பில், சனாதன ஹிந்து தர்ம எழுச்சி மாநாடு நேற்று துவங்கியது.

மாநாட்டில் பங்கேற்ற ஹெச்.ராஜா அளித்த பேட்டி:

'தமிழைத் தேடி' என்ற பெயரில் யாத்திரை செல்ல, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் திட்டமிட்டுள்ளார். தமிழைத் தேடி யாத்திரை என்று சொன்னால், தமிழ் தொலைந்து விட்டது என்று தானே அர்த்தம். அதற்கு முன், தமிழை தொலைத்தது யார் என்பதை அறிய வேண்டும். திராவிடத்தால் தமிழ் அழிந்தது.

தமிழை எங்கே தேடினால் கிடைக்கும் என்ற விபரத்தையும் அவரிடம் சொல்ல உள்ளேன்.

தி.மு.க.,வினர் சேது சமுத்திர திட்டத்தை பற்றி பேசி இருக்கின்றனர். இதற்கு, 1 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என்கின்றனர். தமிழகத்திற்கு இதனால் என்ன மிச்சமாகும் என்பதை ஆராய வேண்டும்.

முதலில், நிபுணர் குழு அமைத்து, சேது சமுத்திர திட்டம் வரலாமா, வேண்டாமா என, முடிவெடுங்கள். இந்த திட்டத்தால், ராமர் பாலத்திற்கு எந்த விதத்திலும் பாதிப்பு வரக்கூடாது என்பது தான் எங்கள் கருத்து.

இவ்வாறு ஹெச்.ராஜா கூறினார்.



வாசகர் கருத்து (1)

  • Rajarajan - Thanjavur,இந்தியா

    ஈயம் பூசின மாதிரியும் இருக்கு, பூசாத மாதிரியும் இருக்கு. ராமர் பாலத்தை இடிக்காம எப்படி ஆழப்படுத்த முடியும்?? உங்க மாநில தலைவர், இந்த திட்டம் வேண்டாம்னு ஆதாரத்தோடு சொன்ன அப்பறம், எதுக்கு உருட்டிட்டு இருக்கனும் ??

  • Sampath Kumar - chennai,இந்தியா

    unga ramar palathuku onnum aakthu இந்த திகதி முதலில் ஏதிர்த்ததே உங்க பிஜேபி கட்சி தான் அதுவும் உங்க தலைமையில் ராமநாதபுரத்தில் கூட்டம் பூட்டு பேசியது நினைவில் இல்லை போல நிபுணர் குழு அமைக்காமல் இந்த திட்டம் செயல் படுத்த பட மாட்டாது என்று அரசுக்கு தெய்ரயும் உங்க பிஜேபி காரனிடம் பொய் சொல்லுங்க இங்கு சங்கு ஊத வேண்டாம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement