மோடி ஏன் கவலைப்படுகிறார்?
இந்த செய்தியை கேட்க

இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில் சொன்னாராம். 'உலகத்தில் எங்கும் இல்லாத அளவிற்கு, நம் நாட்டில் கொரோனா தடுப்பூசி திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. சமூக நீதிக்கான திட்டங்கள், பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டங்கள் என, பலவற்றை மோடி செய்து வருகிறார்.
'இருந்தும், சிலர் அவரை தேவையில்லாமல் குறை கூறி வருகின்றனர். இதன் பின்னணியில் வெளிநாட்டு சதித் திட்டம் உள்ளது. வரும் லோக்சபா தேர்தலில் மோடி வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் ஆகக் கூடாது என, எட்டு வெளிநாட்டு அதிபர்கள் திட்டம் தீட்டியுள்ளனர்' என அமித் ஷா சொன்னதும், அனைவரும் அதிர்ந்து போயினர்.
நம் நாட்டில் மோடிக்கு எதிராக செயல்படும் சில சக்திகளுக்கு, இந்த வெளிநாட்டு அதிபர்கள் கோடிக்கணக்கில் பணம் தருகின்றனராம். இதை வைத்து மோடிக்கு எதிராக செய்திகள் வெளியிடப்படுகின்றன. வெளிநாட்டு அதிபர்களின் இந்த திட்டத்தை, பிரதமர் மோடி தன்னிடம் தகுந்த ஆதாரங்களுடன் காட்டியதாக அமித் ஷா தெரிவித்தாராம். இதனால் தான் பிரதமர் மோடி கவலையுடன் காணப்பட்டார் எனவும் சொல்லியுள்ளார் அமித் ஷா.
வரும் 2024 லோக்சபா தேர்தலில் இந்த விஷயத்தை தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்த, பா.ஜ., முடிவு செய்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை என்கின்றனர் சீனியர் தலைவர்கள்.
வாசகர் கருத்து (35)
அதாணியோட தகிடு தத்தங்கள் வெளியாகிடிச்சென்ற கவலையாக இருக்குமோ
(உலகநாடுகள் அனைத்தும் ஒரே குடும்பம்).....
நாம் எல்லா விதி மீறல்களையும் பயன்படுத்தி குற்றமற்றவர் என்று இமேஜை உருவாக்கி வைத்திருக்கிறோம் ஆனால் உலகளவில் தமது குற்றங்கள் ஆதாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறதே என கவலை
அப்படி என்ன பெரிய சாதனை பண்ணி விட்டீர்கள் எட்டு நாட்டு அதிபர்கள் உங்கள் மீது பொறாமைப் பட்டு,ஒன்று சேர்ந்து உங்கள் ஆட்சியைக் கவிழ்க்கும் அளவுக்கு?
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
வெளிநாட்டுப்பணம் தேச விரோத சக்திகளுக்கு வருவதற்கான ஆதாரம் மோடியிடம் இருக்கிறது என்றால், நடவடிக்கை எடுப்பதற்கு எதனால் தயக்கம்?