திராவிட செம்மல்கள் போடுவதெல்லாம் வெளிவேஷம்!
இந்த செய்தியை கேட்க
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழுக்கு எழுதிய கடிதம்
என்.நக்கீரன், மதுரையிலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்:
'குடியரசு தினத்தன்று, ஊராட்சி தலைவர்கள் தேசியக்கொடி ஏற்றுவதற்கு, எந்தத் தடையும், இடையூறும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்' என, மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுரை கூறியிருந்தார், தமிழக தலைமைச் செயலர் இறையன்பு. ஆனாலும், வழக்கம் போல தங்களின் திருவிளையாடலை காட்டி விட்டனர், தி.மு.க.,வினர்.
காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழி ஊராட்சியின் தலைவராக இருப்பவர், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த சுகுணா மேரி. பட்டியலினத்தைச் சேர்ந்த இவர், குடியரசு தினத்தன்று, திருப்புட்குழி அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசியக்கொடி ஏற்றச் சென்றுள்ளார்; அவரை, தி.மு.க., கிளை செயலர் பாலச்சந்திரன் உட்பட சிலர் தடுத்துள்ளனர்.
பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண்மணியான ஜனாதிபதி திரவுபதி முர்மு, டில்லியில் குடியரசு தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றி வைத்துள்ள நிலையில், ஊராட்சி தலைவரான சுகுணா மேரி, திராவிட மாடல் ஆட்சி நடக்கும் அருமை தமிழகத்தில், தேசியக் கொடி ஏற்ற முடியாமல் தடுக்கப்பட்ட கொடுமை நடந்துள்ளது.
அம்பேத்கரின் உண்மையான விசுவாசியான, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், இதுபற்றி வாயே திறக்கவில்லை. அதேநேரத்தில், 'அடடா... இதுவல்லவோ திராவிட செம்மல்கள் போற்றும் சீர்மிகு சமூக நீதி' என்று கேலி செய்திருக்கிறார், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை.
திராவிட செம்மல்கள் பெண்களை, 'ஓசி கிராக்கி'கள் என்று ஏளனம் செய்வர்; பெண் போலீசுக்கும் தாங்க முடியாத பாலியல் தொல்லை கொடுப்பர்; மனு கொடுக்க வந்த பெண்ணை, அந்த மனுவாலே தலையில் அடித்து தொல்லை தருவர்.
முந்தைய தி.மு.க., ஆட்சிக் காலத்தில், முன்னாள் பிரதமர் இந்திராவுக்கும், அ.தி.மு.க., பொதுச்செயலராக இருந்த ஜெயலலிதாவுக்கும், தாங்க முடியாத தொல்லைகள் கொடுத்த, திராவிட செம்மல்கள், சாதாரண ஊராட்சி தலைவரை மட்டும் விட்டு விடுவரா?
நடிகை பானுமதியின் கற்பு பற்றி ஏளனம் செய்தார், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை. 'திராவிட நாடு எங்கே இருக்கிறது' என்று சட்டசபையில் அப்பாவித்தனமாக கேள்வி கேட்ட அனந்தநாயகிக்கு, கருணாநிதி கொடுத்த விளக்கம், ஆபாசத்தின் உச்சம் என்பதை நாடறியும்.
பெண்களை தரக்குறைவாக விமர்சனம் செய்வதில், நாலாந்தர பேச்சாளர்களை விட கைதேர்ந்தவர்கள், தி.மு.க., அமைச்சர்கள் என்பதும் நிரூபணமாகி உள்ளது. இந்த நிலையில், 'பெண்மையை போற்றுவோம்; பெண்மையை மதிப்போம்' என்று, திராவிட செம்மல்கள் சொல்வது வெறும் வெளிவேஷம். 'பெண்மையை துாற்றுவோம்; பெண்மையை மிதிப்போம்' என்பதே, அவர்களின் கொள்கை.
lll
வாசகர் கருத்து (23)
திராவிட மாடல் சித்தாந்தம் - 1)பணம் செய் - கொள்ளை, ஊழல் செய்தாவது 2) காரியம் செய்வதாக காண்பி - ஒருக்காலும் ஒரு காரியத்தையும் செய்யாதே செய்வது போல மீடியாவில் காட்டு அதை அங்கேயே நிறுத்து. 3) முதல்வர் (வா)ஆய்வு விட்டாலும் அதையும் புகழ்.
முடியில் தொடங்கி எல்லாம் வேஷம் , முடிவில்லா வேஷம்.
இதுதான் திராவிட மாடல்
மேல் நிலை பள்ளியில் மேல் நிலை பள்ளி முதல்வரே கொடியேற்றட்டுமே.
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
இதெற்கெல்லாம் காரணம்,,, முக்கியமாக,, தேர்தலில் பணம் விளையாடுவதுதான்.தகுதி இல்லாதவர்கள், தேர்ந்தெடுக்க படுகிறார்கள்.இரண்டாவது, சிறுபான்மையினர் வோட்டு வாங்கி,,,, மூன்றாவது சுமார், முப்பது சதவிகிதம்,, படித்த, முன்னேறிய சமுதாயம் ,வோட்டு சாவடிக்கே போவதே இல்லை? நமக்கு ஏன் இந்த வம்பு என்று, வீட்டில் இருக்கிறார்கள். இந்த நிலை மாறும் வரை, தகுதி இல்லாதவர்கள், ஆள்வதுதான், தமிழர்களின் தலைவிதி?