வேளாண் பட்டயப்படிப்பு: ஆன்லைனில் கலந்தாய்வு
கோவை;வேளாண் பல்கலைவழங்கும்வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் பட்டயப்படிப்புகளுக்கான கலந்தாய்வு, நேற்று இணையவழியில் துவங்கியுள்ளது.
இப்பட்டயப்படிப்புகளுக்கு, 2022-23 கல்வியாண்டுக்கு மொத்தம், 2036 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அதில், 2025 விண்ணப்பங்கள் தகுதியானதாக கருதப்பட்டு தரவரிசை பட்டியல் 27ம் தேதி, www.tnau.ucanapply.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று துவங்கிய கலந்தாய்வு, நாளை நிறைவடையும் என பல்கலை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இணையதள கலந்தாய்வுக்கு கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை. சான்றிதழ் சரிபார்ப்பின் போது, கட்டணம் பெற்றுக்கொள்ளப்படும்.
இணையதளத்தில் நாளை மாலை, 5:00 மணி வரை கல்லுாரி மற்றும் பாட விருப்பங்களை மாற்றிக்கொள்ளலாம். சான்றிதழ் சரிபார்ப்பு பிப்.,1ம் தேதி வேளாண் பல்கலை அண்ணா அரங்கில் நடைபெறும். மேலும் விபரங்களுக்கு, 0422-6611345 என்ற எண்ணில் அழைக்கலாம்.
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!