Advertisement

என்.எஸ்.எஸ். முகாமில் 43 மாணவர்கள் மயக்கம்

நாகர்கோவில்:கன்னியாகுமரியில் நடைபெற்ற என்.எஸ்.எஸ். முகாமில் காலை உணவு சாப்பிட்ட 43 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.மத்திய அரசின் புனித் சாகர் அபியான் திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி கடற்கரையை சுத்தம் செய்யும் பணியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 150 என்.எஸ்..எஸ். மாணவர்கள் ஈடுபட்டனர்.

திருவேணி கடற்கரையில் இவர்களுக்கு இவர்களுக்கு காலை உணவாக இட்லி, சட்னி, சாம்பார், வடை வழங்கப்பட்டது. இதை சாப்பிட்ட 43 மாணவ மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. கொட்டாரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 30 பேர் வெளி நோயாளியாக சிகிச்சைக்குப்பின் அனுப்பப்பட்டனர். 13 பேர் மேல்சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்ககப்பட்டனர்.

இவர்களை கலெக்டர் அரவிந்த், மேயர் மகேஷ் சந்தித்து நலம் விசாரித்தனர். காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement