போலீஸ் சீருடையில் டூ - வீலர் திருட்டு
நாகர்கோவில்:நாகர்கோவில் அருகே, போலீஸ் உடையில் வந்து பழுதான திருட்டு, 'டூ -- வீலரை' வைத்து விட்டு, கடைக்காரரின் டூ - வீலரை வாங்கி சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.
நாகர்கோவில் - திருநெல்வேலி நான்கு வழிசாலையில் திருப்பதிசாரத்தில் பெட்டிக்கடை வைத்திருப்பவர் பெர்னாட், 40. நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி, வீட்டுக்குச் செல்ல இருந்த போது, போலீஸ் உடையில் ஒருவர் வந்தார்.

'என் டூ - வீலரில் பெட்ரோல் தீர்ந்து விட்டது. என் இரு சக்கர வாகனத்தை இங்கு நிறுத்தி செல்கிறேன். பெட்ரோல் வாங்கி வர, உங்கள் வண்டியை தாருங்கள்' என, கேட்டுள்ளார். போலீஸ்காரர் என நம்பி, பெர்னாடும் கொடுத்தார்.
நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால், வடசேரி போலீசில் புகார் செய்தார். விசாரணையில் போலீஸ் உடையில் வந்தவர், பெட்டிக்கடை முன் நிறுத்தி சென்றது வடசேரி பஸ் ஸ்டாண்டில் திருடப்பட்ட டூ - வீலர் என்பது தெரிந்தது.
அது பழுதானதால் அதை நிறுத்தி விட்டு, கடைக்காரரின் டூ -வீலரை நுாதனமாக பேசி, 'அபேஸ்' செய்துள்ளார். 'சிசிடிவி' கேமரா பதிவுகளை பார்த்து போலீசார் விசாரிக்கின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!