ADVERTISEMENT
நாகர்கோவில்:நாகர்கோவிலில், 2,000 ரூபாய் அபராதம் விதித்ததால், ஆட்டோ டிரைவர் தீக்குளிக்க முயன்றார்.
நாகர்கோவில் பீச்ரோடு பகுதியை சேர்ந்த காந்தி, 45; ஆட்டோ டிரைவர், தன் வீட்டின் முன்னால் ஆட்டோவை நிறுத்தியிருந்தார். அவ்வழியாக வந்த போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ., மோகன், லைசென்ஸ் கேட்டுள்ளார்.
அதற்கு, தன்னிடம் நான்கு சக்கர லைசென்ஸ் இருப்பதாக கூறியுள்ளார். இதை தொடர்ந்து இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதித்த, எஸ்.ஐ., அதற்கான 'பில்' கொடுத்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த காந்தி, தன் மனைவி, மகனுடன் பீச்ரோடு ஜங்ஷனில் மண்ணெண்ணை கேனுடன் வந்து தீக்குளிக்க முயன்றார்.
அப்பகுதி மக்கள் தடுத்து அவரை சமாதானம் செய்து அழைத்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!