அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் மீதான சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு
ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடக்கும் தமிழக அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை, பிப்., 3க்கு ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த 2006 - 2011 வரை தி.மு.க., ஆட்சியின்போது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில், அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மீது ஜெ., ஆட்சியின் போது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில், இவ்வழக்கிலிருந்து கடந்த டிசம்பரில் அமைச்சர் தங்கம் தென்னரசு, அவரது மனைவி மணிமேகலை விடுவிக்கப்பட்டனர்.
தற்போது அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன், மனைவி ஆதிலட்சுமி, விருதுநகர் தொழிலதிபர் சண்முகமூர்த்தி ஆகியோர் மீதான வழக்கு மட்டும் நடந்து வருகிறது.
தங்களையும் வழக்கிலிருந்து விடுவிக்க கோரி, அமைச்சர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது நேற்று விசாரணை நடந்தது.
அரசு தரப்பில், மாநில அரசு வழக்கறிஞர் ஜின்னா; அமைச்சர் ராமச்சந்திரன் தரப்பில் தி.மு.க., - எம்.பி., இளங்கோ வாதிட்டனர். பின், வழக்கின் விசாரணையை பிப்., 3க்கு நீதிபதி கிறிஸ்டோபர் ஒத்திவைத்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!