அண்ணாமலை செயல்பாடு நல்லா இருக்கு: வைகோ
நாகர்கோவில்:''அண்ணாமலை செயல்பாடு 'நல்லா இருக்கு,' என ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ கூறினார்.
நாகர்கோவிலில் அவர் கூறியதாவது:
நாகர்கோவிலில் அவர் கூறியதாவது:
கொள்கைக்காக, கோரிக்கைக்காக விருதுநகரில் சங்கரலிங்க நாடார் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த நிலையில் அவரது கோரிக்கையை நிறைவேற்ற தமிழ்நாடு என்று 3 முறை கூறி சூட்டப்பட்ட பெயரை, தமிழகம் என மாற்ற வேண்டும் என்று ஆணவத்தின் உச்சக்கட்டத்தில் கவர்னர் ரவி பேசியுள்ளார். அவர் கருத்தை திரும்ப பெற்று தவறாக பேசி விட்டேன் என்று கூற வேண்டும்.
கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். அவரை இயக்குவது சங் பரிவார், ஹிந்துத்துவா அமைப்புகளுக்கு இதை சொல்ல தைரியம் கிடையாது. அவர்களின் ஊது குழலாக கவர்னர் செயல்பட்டு வருகிறார், என்றார்.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாம லையின் செயல்பாடு எப்படி உள்ளது என்ற நிருபர்களின் கேள்விக்கு நல்லா இருக்கு என நக்கலாக கூறியதும் அவரது ஆதரவாளர்கள் சிரித்தனர். அவரும் சிரித்த படி சென்றார்.
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!