Advertisement

சென்னையில் பழங்கால கார் கண்காட்சி

சென்னையில் மைலாப்பூர் ஏவிஎம் ராஜேஸ்வரி திருமண மண்டப வளாகத்தில் பழங்கால கார்களின் இரண்டு நாள் கண்காட்சி நடந்து வருகிறது.
80ற்கும் அதிகமான கார்களும்,இரு சக்கர வாகனங்களும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளனஉலகில் முதன் முதலாக 1886 ம் ஆண்டு பென்ஸ் அவர்களால் தயாரிக்கப்பட்ட முதல் மோட்டார் வாகனமும்,பின் பத்தாண்டு கழித்து போர்டு அவர்களால் தயாரிக்கப்பட்ட மோட்டார் வாகனமும்தான் கண்காட்சியில் ஹைலைட்அந்தக்காலத்தில் வாகனங்கள் அதிகம் கிடையாது அதனால் விபத்தும் அதிகம் ஏற்படாது இருந்தாலும் கார் உரிமையாளர்கள் சிலர் தங்கள் ரத்தத்தின் வகையை கார்களின் ஒரத்தில் எழுதிவைத்துள்ளனர் ஏதாவது அசாம்பாவிதம் நடந்து தங்களுக்கு ரத்தம் ஏற்றித்தான் பிழைக்கவைக்க முடியும் என்ற நிலையில் மயக்கத்தில் இருக்கும் தங்களின் ரத்தம் என்ன வகை என்பதை மருத்துவர்கள் அறிந்து கொள்ளட்டும் என்ற விழிப்புணர்வுடன் எழுதி வைத்துள்ளனர்.கார்களாகட்டும் இரு சக்கர வாகனங்களாகட்டும் பளபள என்று இப்போதுதான் ேஷாரூமில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது போன்று துடைத்து பராமரித்து வைத்துள்ளனர்.கண்காட்சியில் இடம் பெற்றுள்ள பல பழைய கார்கள் இப்போது ரோட்டில் ஒடக்கூடிய தரத்திலேயே உள்ளது என்பது இன்னோரு ஆச்சர்யம்.கார்களின் உரிமையாளர்கள் சிலர் தங்கள் கார் அருகே நின்று கொண்டு அதன் அருமை பெருமைகளைப் பற்றி விலாவாரியாக விளக்கிக் கொண்டிருந்தனர்.தி மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டரிங் கிளப் சார்பாக நடைபெற்று வரும் இந்தக்கண்காட்சி நாளையுடன் (18/12/2022) நிறைவு பெறுகிறது பல ஆச்சரியங்களை உள்ளடக்கியுள்ள இநத் பழங்கால கண்காட்சி அணைவரும் காணவேண்டிய ஒன்றுதான்.

-எல்.முருகராஜ்



வாசகர் கருத்து (3)

  • Lion Drsekar - Chennai ,இந்தியா

    wonderful exhibition sir, I have travelled in these cars , amazing, thanks a lot for your excellent sharings, Netaji Subash Chandra bose car is also in the same pattern, they have kept it in their house , vandhe madharam .

  • g.s,rajan - chennai ,இந்தியா

    இந்தியா ஏழை நாடு ஆனால் இந்தியாவில் அம்பானிகள் அதானிகள் போல மிகப் பெரும் கோடீஸ்வரர்கள் நிறைய பேர் இருக்கின்றனர் .

  • குஞ்சுமணி சென்னை - Chennai ,இந்தியா

    இந்தியா மாதிரி ஏழை நாடுகளுக்கு இந்த மாதிரி கண்காட்சிகள் தேவைதானா ?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement