Advertisement

காதல் மனைவியை கொன்றகணவர் தற்கொலை முயற்சி

ADVERTISEMENT
நாகர்கோவில்:நாகர்கோவில் அருகே காதல் மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த கணவர் தற்கொலைக்கு முயன்று தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.

நாகர்கோவில் அழகியமண்டபம் அருகே தச்சக்கோட்டையை சேர்ந்தவர் எபநேசர் 35. இவரது மனைவி ஜெயபிரின்ஷா 31. காதலித்து திருமணம் செய்த இவர்களுக்கு ஜெபசேபன் 14, ஜெபஆகாஷ் 13, ஆகிய மகன்கள் உள்ளனர். எபநேசருக்கு குடி பழக்கம் இருந்ததால் கணவன், மனைவி இடையே அடிக்கடிசண்டை ஏற்பட்டது. இதனால்ஜெயபிரின்ஷா தாயார் வீட்டுக்கு சென்று விட்டார்.

அங்கிருந்து திருவனந்தபுரத்தில் அழகுகலை படிக்க சென்றார். விதம் விதமான ஆடை அணிந்து சென்றதால் மனைவி மீது எபநேசருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனால் ஜெயபிரின்ஷாவை அழைத்து கொண்டு தன் வீட்டிற்கு எபநேசர் திரும்பி வந்தார். வரும் வழியில் சண்டை ஏற்படவே பரைக்கோடு பகுதியில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஜெயபிரின்ஷாவை வெட்டி கொலை செய்து விட்டு எபநேசர் தப்பினார்.

பின் அப்பகுதியில் விஷம் குடித்து மயங்கி கிடந்த எபநேசரை மீட்டு மார்த்தாண்டத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தினர். போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement