Advertisement

ரயில் தண்டவாளத்தில் கார் கவிழ்ந்து விபத்து

ADVERTISEMENT
நாகர்கோவில்:தண்டவாளத்தில் கார் கவிழ்ந்ததால், திருவனந்தபுரம் - நாகர்கோவில் பாதையில் ஒரு மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குமரி மாவட்டம் குளச்சல் அருகே ரீத்தாபுரத்தை சேர்ந்தவர் வர்கீஸ். நேற்று முன்தினம் இரவு தன் காரில் மகள் ஆஷா மற்றும் பேத்தி செரியாவுடன் அழகியமண்டபத்தில் உறவினர் வீட்டுக்கு சென்றார்.

நெய்யூர் அருகே பாலம் வேலை நடைபெறுவதால் மாற்று வழியில் செல்வதற்காக காரை இடது பக்கம் திருப்பிய போது, கட்டுப்பாட்டை இழந்து, 10 அடி ஆழத்தில் தண்டவாளத்தில் விழுந்தது.

இதுபற்றி இரணியல், குழித்துறை ரயில் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ரயில்கள் நிறுத்தப்பட்டன. தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் காரில் இருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய பின், காரை, கயிறு கட்டி மேலே எடுத்தனர்.

இதனால் திருவனந்தபுரம் - நாகர்கோவில் இடையே ஒரு மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement