ADVERTISEMENT
நாகர்கோவில் :தி.மு.க. வசமுள்ள கன்னியாகுமரி பேரூராட்சியில் வளர்ச்சிப்பணிகள் நடக்கவில்லை எனக்கூறி செயல் அலுவலருக்கு எதிராக அக்கட்சி கவுன்சிலர்களே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மொத்தம் 18 வார்டுகள் கொண்ட இப்பேரூராட்சியில் தி.மு.க. 15 அ.தி.மு.க. காங். பா.ஜ. தலா ஒரு கவுன்சிலர்கள் உள்ளனர். தலைவராக தி.மு.க. ஸ்டீபன் உள்ளார். பத்து மாதங்களாக வார்டுகளில் வளர்ச்சி பணிகள் நடக்கவில்லை.

குடிநீர் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை கூட சரியாக செய்யவில்லை. சபரிமலை சீசன் துவங்கிய நிலையில் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கடைகளை அகற்றவில்லை என குற்றம் சாட்டி செயல் அலுவலர் அறையில் தி.மு.க. கவுன்சிலர்கள் 13 பேர் தர்ணா உள்ளிருப்பில் ஈடுபட்டனர்.
ஆளும் கட்சி கவுன்சிலர்களே அதிகாரியை கண்டித்து போராட்டம் நடத்தியதை எதிர்கட்சியினர் விமர்சித்தனர். வளர்ச்சி பணிகள் நடக்கவில்லை என தி.மு.க.வினரே ஒப்புக்கொண்டுள்ளனர் என பா.ஜ. அ.தி.மு.க. கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!