ADVERTISEMENT
நாகர்கோவில்:இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் கன்னியாகுமரியில் விண்வெளி பூங்கா ஸ்பேஸ் சயின்ஸ் மற்றும் டெக்னாலஜி பார்க் அமைக்கப்பட உள்ளது.
இதற்கான இடம் கன்னியாகுமரி கோவளம் கடற்கரை ஒட்டி சன்செட் வியூ பாயின்ட் அருகே தேர்வு செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம், இந்த இடத்தை சோம்நாத் மற்றும் இஸ்ரோ உயரதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இதற்கான இடம் கன்னியாகுமரி கோவளம் கடற்கரை ஒட்டி சன்செட் வியூ பாயின்ட் அருகே தேர்வு செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம், இந்த இடத்தை சோம்நாத் மற்றும் இஸ்ரோ உயரதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
பின்னர் சோம்நாத் கூறியதாவது:
விண்வெளி பூங்கா நிறுவ தமிழக அரசு 12 ஏக்கர் இடத்தை விண்வெளி ஆய்வு மையத்திடம் ஒப்படைத்துள்ளது. இதற்கான பணிகள் விரைவில் துவங்கும். மங்கல்யான் ராக்கெட் அமைப்பதற்கான பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. விரைவில் இது விண்ணில் ஏவப்படும். விண்வெளிப்பயணம் மேற்கொள்வதற்காக வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக சோதனை அடிப்படையில் மனிதர்கள் போன்ற பொம்மைகளை தயார் செய்து விண்வெளிக்கு அனுப்பி பின்னர் அவற்றை கடலில் விழச் செய்து சோதனை செய்யப்படும். அதன் பின்னர் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் நடவடிக்கைகள் தொடங்கும், என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!