சாலையோரம் காய்கறி விற்பனை தடை செய்ய சேர்மனிடம் மனு
காங்கேயம், டிச. 9-
காங்கேயம் நகராட்சி சேர்மன் சூரியபிரகாஷிடம், நகராட்சி வணிக வளாக கடைக்காரர்கள் சிலர், நேற்று மனு கொடுத்தனர். மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: நகராட்சி தினசரி வணிக வளாகத்தில், 30க்கும் மேற்பட்டோர் காய்கறி வியாபாரம் செய்கிறோம்.
ஆனால் காங்கேயம், பழையகோட்டை ரோடு, தாராபுரம் ரோடு பகுதியில் இருபுறமும், 10க்கும் மேற்பட்டோர் தினமும் சில்லறை காய்கறி வியாபாரம் செய்கின்றனர். இதனால் எங்களுக்கு வியாபாரம் பாதித்து, இழப்பு ஏற்படுகிறது.
வியாழக்கிழமை தோறும் காய்கறி மொத்த விற்பனை நடந்தது. தற்போது மாலை, 5:00 மணி வரை சில்லரை வியாபாரம் செய்வதால், எங்கள் வியாபாரம் பெரிதும் பாதிக்கிறது. அனுமதியுமின்றி வியாபாரம் செய்பவர்களை அப்புறப்படுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!