ஐயப்பன் கோவிலில் 11ல் கும்பாபிஷேகம்
புன்செய்புளியம்பட்டி, டிச. 9-
புன்செய்புளியம்பட்டி நேருநகரில், சித்தி விநாயகர், தர்மசாஸ்தா ஐயப்பன் கோவில் உள்ளது. இங்கு சபரிமலை போல், 18 படி அமைக்கப்பட்டுள்ளது. கோவிலில், 200௯ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது. இரண்டாவது கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து, திருப்பணிகள் நடந்தன. இந்நிலையில் கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா இன்று துவங்குகிறது.

நாளை இரண்டாம், மூன்றாம் கால யாக பூஜை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், சுவாமி சிலை பிரதிஷ்டை நடக்கிறது. 11ம் தேதி காலை, 4:30 மணிக்கு, விமான கலசம் எடுத்து செல்லப்படுகிறது. 7:30 மணிக்கு மேல், 8:15 மணிக்குள் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது. முன்னதாக நேற்று மாலை பவானி ஆற்றில் இருந்து, தீர்த்தக்குடம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஐயப்பன் கோவில் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!