பகவதி அம்மன் கோவிலில் கார்த்திகை பொங்கல் விழா
அமைந்தக்கரை :ஷெனாய் நகர், மேற்கு பிராதன சாலையில் சக்ர பகவதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 17ம் ஆண்டு கார்த்திகை பொங்கல் திருவிழா, வரும் 11ம் தேதி நடக்கிறது.
கடந்த 5ம் தேதி பந்தக்கால், கணபதி ஹோமத்துடன் துவங்கிய நிகழ்ச்சி, தொடர்ந்து நடந்து வருகிறது.வரும் 11ல் காலை கிருஷ்ணமூர்த்தி குருசாமி குடும்பத்தினர் பகவதி அம்மனுக்கு சீர்வரிசை எடுத்து வருகின்றனர். கருட தரிசன பூஜை நடக்கிறது.
தொடர்ந்து, ஒரே நேரத்தில் கோவில் வளாகத்தில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அம்மனுக்கு குருதி அபிஷேகம், அம்பாள் வீதி ஒய்யாளி சேவை ஆகியவை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!