நீதிமன்றத்தில் மனைவிக்கு பதிலாக ஆஜரான கணவருக்கு சிறை
தனியார் வங்கி ஒன்றில், 14 லட்சம் ரூபாய் கடன் வாங்கி உள்ளனர். இதில் 13 லட்சம் ரூபாய் கடன் தொகையை கட்டிய நிலையில், மீதமுள்ள 94 ஆயிரம் ரூபாய் கட்டாமல் இருந்துள்ளனர்.
இந்நிலையில், தன் மனைவியின் பெயரில் வங்கிக்கு, கணவர் காசோலை வழங்கினார். ஆனால், வங்கி கணக்கில் பணம் இல்லாததால், காசோலை திரும்பியது.
சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகம், இது சம்பந்தமாக பூந்தமல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
பூந்தமல்லி நீதிமன்ற நீதிபதி ஸ்டாலின், நேற்று முன்தினம் விசாரித்தார்.
அப்போது, சம்பந்தப்பட்ட மல்லானகிரி பிரவீனாவை விசாரணைக்கு அழைத்தபோது, மல்லானகிரி இந்திரசேனா ரெட்டி ஆஜரானார்.
நீதிபதி விசாரணையில், மனைவிக்கு பதிலாக ஆள்மாறாட்டம் செய்து, கணவரே இந்த வழக்கில் ஆஜராகி வந்தது தெரிந்தது.இதையடுத்து, ஆள் மாறாட்டம் செய்த மல்லானகிரி இந்திரசேனா ரெட்டியின் மீது புகார் அளித்து, பூந்தமல்லி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
போலீசார், மல்லானகிரி இந்திரசேனா ரெட்டியின் மீது, ஆள் மாறாட்டம் மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
புரியலையே. பெண் வேஷம் போட்டுக்கிட்டு வந்தாரா? எப்படி ஆள் மாறாட்டம் செய்தார்? எதிர்த் தரப்பு வக்கீலுக்கு ஆண் பெண் மாறாட்டம் எப்படித் தெரியாமல் போனது?