13 வயது சிறுமி கர்ப்பம் தந்தையின் நண்பர் சிக்கினார்
சேலம் : சேலத்தில், 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய, கட்டட மேஸ்திரியிடம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
சேலம் எம்.கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஞானமூர்த்தி, 39; கட்டட மேஸ்திரி. திருமணமான இவர், அதே பகுதியில் உள்ள அவரது நண்பர் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.
இந்நிலையில், 8ம் வகுப்பு படித்து வரும் நண்பரின், 13 வயது மகள், வயிற்று வலி காரணமாக, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், சிறுமி, 5 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரிந்தது. அதிர்ச்சியடைந்த பெற்றோர், சூரமங்கலம் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.
போலீசார் விசாரணையில், தந்தையின் நண்பர் ஞானமூர்த்தி தான் கர்ப்பத்திற்கு காரணம் என சிறுமி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, கட்டட மேஸ்திரி ஞானமூர்த்தியிடம் போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!