ADVERTISEMENT
வேலுார்: வேலுார் மாவட்டம், பள்ளிகொண்டா டோல்கேட்டில் நேற்று இரவு 11:00 மணிக்கு பள்ளிகொண்டா போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திரா பதிவெண் கொண்ட வேனை மடக்கினர். போலீசாரை பார்த்ததும் வேனை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பியோடினார். 4 கி.மீ., துாரம் விரட்டிச் சென்று போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர்.
அதில், பிடிபட்டவர் ஆந்திரா மாநிலம், சித்துாரை சேர்ந்த குமார், 34, என்பதும், கார் திருடரான அவர் வேலுார் மாவட்டம், மாதனுாரில் சாலையோரம் நிறுத்தியிருந்த வேனை திருடிக்கொண்டு அதற்கு ஆந்திரா பதிவெண் கொண்ட போலி நம்பர் பிளேட் மாட்டி ஓட்டிக் கொண்டு வந்த போது பிடிபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து வேனை பறிமுதல் செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!