Advertisement

இழப்பீடு வழங்காததால், 5 ஏக்கர் நெற்பயிருக்கு தீ வைத்த விவசாயிகள்

ADVERTISEMENT
வேலுார்: வேலுார் மாவட்டம், பொன்னை அருகே கொண்டா ரெட்டிபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார், 45. இவரது 5 ஏக்கர் நிலத்திற்கு வேளாண்மை துறை மூலம் பயிர் காப்பீடு செய்தார். இதற்கு 4 ஆயிரம் கட்டணம் செலுத்தியிருந்தார். கடந்த மாதம் பெய்த மழையால், இவரது நிலத்தில் விளைந்திருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசமானது.
வேளாண்மைத்துறை அதிகாரிகள் மூலம் காப்பீட்டுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து இழப்பீடு வழங்கும்படி கடிதம் அனுப்பினார். இழப்பீடு வழங்கவில்லை. விரத்தியடைந்த சிவக்குமார் மற்றும் சில விவசாயிகள் சேர்ந்து இன்று(டிச.,01) அவரது 5 ஏக்கர் நிலத்திற்கு தீ வைத்தனர்.

இதில் அரை ஏக்கர் நிலம் எரிந்து நாசமானது. பொன்னை போலீசார், தீயணைக்கும் துறையினருடன் வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். வேளாண்மைத்துறை அதிகாரிகள் மூலம் பயிர் காப்பீட்டு நிறுவனத்திடம் பேசி இழப்பீடு வாங்கித் தர நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறி அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.



வாசகர் கருத்து (5)

  • Alagu Muthusamy - BANGALORE,இந்தியா

    Their product and they can dispose of as they please. தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் குப்பையில் கொட்டிய துயரங்கள், விற்காமல் மீந்த விளை பொருட்களை, அப்படியே விட்டு விட்டு (திரிம்பி எடுத்துச் செல்ல அதிக பணம் செலவாகும்) போன்றவை எத்தனையோ உண்டு.

  • g.s,rajan - chennai ,இந்தியா

    மிகவும் வயிற்று எரிச்சலான ஒன்று .இந்தியா ஒரு விவசாய நாடு ,சாகுபடி செய்ய வேண்டிய விவசாயியை சாகும்படி செய்ய விடலாமா இழப்பீடு தருவதில் மெத்தனம் காட்டும் மத்திய ,மாநில அரசுகள் குறித்து மிகவும் வேதனைதான் மிஞ்சுகிறது .

  • Siva - Aruvankadu,இந்தியா

    அந்த நெருப்பு அந்த விவசாயி .,............. அதை புரிந்து கொண்டு மக்கள் வரி பணம் மூலம் வாழ்க்கை நடத்தும்.அதிகாரிகள்.ஒழுங்காக.பணி.செய்யனும்.

  • Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா

    அந்த நபரை ஏன் கைது செய்யவில்லை?

    • தத்வமசி - சென்னை ,இந்தியா

      இழப்பீடு வழங்கத் தவறிய அந்த அரசு அதிகாரியை முதலில் கைது செய்ய வேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement