அரை நூற்றாண்டு பிரச்னைக்கு தீர்வு
குமாரபாளையம் அருகே, 50 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றிய முன்னாள் அமைச்சர் தங்கமணி, சங்ககிரி எம்.எல்.ஏ., சுந்தர்ராஜ் ஆகியோரை பொதுமக்கள் பாராட்டினர்.
குமாரபாளையத்தில் அருகே தட்டான்குட்டை பஞ்.,சில் வாசுகி நகர், சேலம் மாவட்டம் கத்தேரி கிராமம் ஆகியவற்றை இணைக்கும் பகுதியில் ஏரி உள்ளது. இந்த ஏரியில் இருந்து குமாரபாளையத்திற்கு செல்லும் கால்வாய்ப்பகுதியை சிலர் ஆக்கிரமித்துள்ளதால், ஆக்கிரமிப்புகளை அகற்றி, கால்வாய் பகுதி மற்றும் அதை ஒட்டிய சாலையினை அமைக்கக்கோரி, 50 ஆண்டுகாலமாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த இரண்டு கிராமங்களை இணைக்கும் சாலைகளை அமைக்க, முன்னாள் அமைச்சர் தங்கமணி, சேலம் மாவட்டம், சங்ககிரி எம்.எல்.ஏ.,
சுந்தரராஜ் ஆகியோர் ஏற்பாட்டில், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, நிலங்கள் விலைக்கு வாங்கப்பட்டு, அதில், இரண்டு கிலோமீட்டர் துாரம் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையை, நேற்று முன்னாள் அமைச்சர் தங்கமணி நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது இரு கிராம பொதுமக்களும், முன்னாள் அமைச்சருக்கும்,
எம்.எல்.ஏ., சுந்தர்ராஜூக்கும் நன்றி தெரிவித்து பாராட்டினார்.
* குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாலை வசிக்கும் ஜெயக்கொடி, 38, என்ற, கணவரை இழந்தவரின் வீடு, தீ விபத்தில் எரிந்து சேதமானது. இவரது மகள் அபி, அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2
படிக்கிறார்.
இதையடுத்து ஜெயக்கொடிக்கு ஆதரவு அளிக்கும் வகையில், முன்னாள் அமைச்சர் தங்கமணி தையல் மெஷின் மற்றும் உபகரணங்கள் வழங்கி, ஆறுதல் கூறினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!