ADVERTISEMENT
திருச்சி: மணப்பாறை அருகே, சிறுமிகளின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியதாக, சி.பி.ஐ., அதிகாரிகள், ராஜா என்பவர் வீட்டில் சோதனை நடத்தினர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள பூமாலைப் பட்டியை சேர்ந்தவர் ராஜா, 44.கடந்த பத்து ஆண்டுகளாக லண்டனில் வேலை பார்த்து வந்த அவர் சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள பூமாலைப் பட்டியை சேர்ந்தவர் ராஜா, 44.கடந்த பத்து ஆண்டுகளாக லண்டனில் வேலை பார்த்து வந்த அவர் சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளார்.
இந்நிலையில், டில்லியில் இருந்து சி.பி.ஐ. அதிகாரிகள் குழு, இன்று(டிச.,1) காலை 6 மணியளவில் அவரது வீட்டிற்கு வந்து, அதிரடி சோதனை நடத்தினர்.
வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த ராஜா, சிறுமிகளின் ஆபாச படங்கள், வீடியோக்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியதாக புகார் கிடைத்துள்ளது.அதன் அடிப்படையில், சிபிஐ அதிகாரிகள் ராஜா வீட்டில் சோதனை நடத்தியதாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. வீட்டில் அனைத்து இடங்களிலும் சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள் 6 பேர் கொண்ட குழு, ராஜாவிடமும் விசாரணை நடத்தினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வாசகர் கருத்து (3)
இப்படிப்பட்ட குற்றவாளிகளின், பெயர் படம் வெளியிட்டால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருப்பார்கள்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
விசாரணை முடிந்த பிறகும்கூட பெயரிடாமல்தான் செய்தியாக வெளிவருகிறது