கால்நடை பராமரிப்பு சிறப்பு மருத்துவ முகாம்
பாலக்கோடு, டிச. 1-
பாலக்கோடு அடுத்த ஏழு குண்டூர் கிராமத்தில், கால்நடை பராமரிப்பு சிறப்பு முகாம் நடந்தது. இதில், கால்நடைகளை பராமரிப்பது குறித்த விழிப்புணர்வு மற்றும் நோய்வாய் பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், செயற்கை முறை கருவுற செய்தல், குடற்புழு நீக்கம் செய்தல், ரத்த மாதிரி பரிசோதனை செய்தல், சினை பரிசோதனை செய்தல், தாது உப்பு கலவை வழங்குதல், பெரியம்மை தடுப்பூசி போடுதல், மழைக்கால நோய் தடுப்பு முறைகள் மற்றும் கால்நடை காப்பீடு திட்டம் பற்றி பொதுமக்களுக்கு மருத்துவர்கள் விளக்கம் அளித்தனர். முகாமில் சிறந்த கன்று வளர்ப்போருக்கும், சிறந்த முறையில் மாடு வளர்ப்பவர்களுக்கும், பரிசுகள் வழங்கப்பட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், மாவட்ட மண்டல இணை இயக்குனர் மருத்துவர் சுவாமிநாதன், உதவி இயக்குனர்கள் மணிமாறன், சுந்தரம், தியாகசீலன், பஞ்., தலைவர் நாராயணசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!