சீமைக்கருவேல மரங்கள் விபரம் 10 நாளில் அறிக்கை அளிக்க உத்தரவு
சேலம், டிச. 1-
சேலம் மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்கள், ஏரி, வனப்பகுதிகளில் உள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதில் பாதிப்பு ஏற்பட்டு விவசாயிகள் சிரமத்துக்குள்ளாகின்றனர். இதனால் வனப்பகுதி, ஏரிகளில் எவ்வளவு சீமைக்கருவேல மரங்கள் உள்ளன. அதை அகற்ற எவ்வளவு நிதி தேவைப்படும் என்பன உள்ளிட்ட விபரங்களை அறிக்கையாக, வனச்சரக அலுவலர்கள், டிச., 9க்குள் அனுப்ப, சேலம் கோட்ட வன அலுவலர் கஷ்யாப் சசாங்க் ரவி

உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி சேர்வராயன் தெற்கு, வடக்கு, டேனிஷ்பேட்டை, ஏற்காடு, வாழப்பாடி, மேட்டூர் ஆகிய வனச்சரக பகுதிகள்; இடைப்பாடி, சங்ககிரி, சேலம், ஓமலுார், வாழப்பாடி, மேட்டூர் ஆகிய சமூக காடுகள் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் வனச்சரக அலுவலர்கள், அறிக்கை தயாரித்து வருகின்றனர். சமூக காடுகள் பிரிவை சேர்ந்த வனச்சரக அலுவலர்கள், பி.டி.ஓ.,க்களிடம் ஏரிகள் குறித்த தகவலை பெற்று, சீமைக்கருவேல மரங்கள் அகற்றுவது தொடர்பாக திட்ட மதிப்பீடு தயாரிக்கின்றனர்.
சில வனச்சரக அலுவலர்கள், மாவட்ட வன அலுவலருக்கு அறிக்கை அளித்துள்ளனர். இந்த அறிக்கை மண்டல வன பாதுகாவலர் மூலம் சென்னை முதன்மை தலைமை வன பாதுகாவலருக்கு அனுப்பப்படும் என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!