Advertisement

6 வயது சிறுமி பலாத்காரம்; குற்றவாளிக்கு 62 ஆண்டு

பாலக்காடு: பாலக்காட்டில் 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், குற்றவாளிக்கு 62 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தின் பட்டாம்பியைச் சேர்ந்தவர் அப்துல் ஹக்கீம், 30. 'மதரசா' எனப்படும் இஸ்லாமிய மத போதனைகளை கற்றுத்தரும் பள்ளியில் பணிபுரியும் இவர், 2019ல் 6 வயது சிறுமியை மதரசாவில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

பெற்றோர் அளித்த புகாரின்படி, போலீசார் இவ்வழக்கை விசாரித்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். வழக்கு பட்டாம்பி விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், நேற்று குற்றவாளிக்கு, 62 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 3 லட்சம் ரூபாய் அபராதத்தை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்கவும் நீதிபதி சதீஷ்குமார் நேற்று உத்தரவிட்டார்.

மாணவியரை 'வெளுத்த' ஆசிரியை மீது வழக்குஹைதராபாத்: தெலுங்கானாவில் காமரெட்டி மாவட்டத்தின் மட்னுார் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் ஒரு மாணவி, மொபைல் போனில் ஆசிரியையை படம் எடுத்தார். பின் அந்தப் படத்தை சமூக வலைதளத்தில், 'போரிங் கிளாஸ்' என தலைப்பிட்டு வெளியிட்டார்.
இந்த தகவல், ஆசிரியைக்கு நேற்று தெரிய வந்தது. இதையடுத்து, அவர் அந்த மாணவியுடன் அவருடைய வகுப்புத் தோழிகள் சிலரையும், ஓட ஓட விரட்டி பிரம்பால் விளாசித் தள்ளினார். இந்தச் சம்பவத்தை மற்றொரு மாணவி மொபைல் போனில் 'வீடியோ' எடுத்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இதைப் பார்த்த ஏராளமானோர் ஆசிரியைக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து மாணவியை அழைத்து விசாரித்த போலீசார், ஆசிரியை மீது வழக்குப் பதிவு செய்தனர். ஆசிரியையின் இந்தக் கொடூர செயலைக் கண்டித்து, சில மாணவியர் பள்ளி முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மதுபான மோசடி; தொழிலதிபர் கைதுபுதுடில்லியில், மதுபான விற்பனையில் தனியாருக்கும் வாய்ப்பு தரும் வகையில் மதுபான கொள்கை மாற்றப்பட்டது. இதில், பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை விசாரித்து வருகின்றன. இந்த வழக்கில், தொழிலதிபர் தினேஷ் அரோரா உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை சார்பில் சமீபத்தில் குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில், இந்த வழக்கில் புதுடில்லியை ஒட்டியுள்ள ஹரியானா மாநிலம் குருகிராமைச் சேர்ந்த தொழிலதிபர் அமித் அரோராவுக்கு தொடர்பு உள்ளதாக, சி.பி.ஐ., தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர், மணீஷ் சிசோடியாவுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. இதையடுத்து அமித் அரோராவிடம், அமலாக்கத் துறையினர் நேற்று முன்தினம் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக நிகழ்வுகள்:மூதாட்டி கற்பழித்து கொலை: வாலிபருக்கு சாகும் வரை சிறைவிழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஒட்டனந்தல் காலனியை சேர்ந்தவர் கணேசன் மகன் கவிதாஸ், 26; பொக்லைன் டிரைவர். இவர், ஆலங்குப்பத்தில் கடந்த 2019ம் ஆண்டில் பைப்லைன் புதைப்பதற்கான பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டார். அன்று நள்ளிரவு 12:00 மணிக்கு, வீட்டில் தனியாக இருந்த 70 வயது மூதாட்டியிடம் கவிதாஸ் அத்துமீறி நடந்தார். அப்போது, கூச்சலிட்ட மூதாட்டியின் கழுத்தில், கவிதாஸ் கத்தியால் குத்தினார். பின், மூதாட்டியை அவர் கற்பழித்தார். நள்ளிரவில் மூதாட்டியின் வீட்டில் விளக்கு எரிவதை கண்ட உறவினர்கள் வந்து பார்த்தபோது, கவிதாஸ் அங்கிருந்து தப்பியோடினார். திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து, கவிதாசை கைது செய்தனர். இவ்வழக்கில் விழுப்புரம் மகிளா கோர்ட்டில் விசாசரணை முடிந்து, நேற்று தீர்ப்பு வழங்கப் பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி, குற்றம்சாட்டப்பட்ட கவிதாசுக்கு இயற்கை மரணம் ஏற்படும் வரை சிறை தண்டனை மற்றும் 3,000 ரூபாய் அபராதம் விதித்து, தீர்ப்பளித்தார்.
சாகும்வரை சிறை தண்டனை பெற்ற கவிதாஸ் மீது கண்டமங்கலத்தில் தாய், மகளை கற்பழித்து கொலை செய்த வழக்கு, திருவெண்ணெய்நல்லுாரில் பெண்ணை கற்பழித்து கொலை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது.மேலும், கடலுார் திருப்பாதிரிபுலியூரில் பெண்ணை கற்பழித்து கொலை செய்த வழக்கு, திருநாவலுாரில் பெண்ணை கற்பழித்து கொன்று நகையை பறித்துச் சென்ற வழக்கு, சேலத்தில் இரு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

எஸ்.ஐ.,யை வெட்ட முயன்ற மணல் கடத்தல் கும்பல்திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே பழவூர் போலீஸ் எஸ்.ஐ., பார்த்திபன் தலைமையில் போலீசார் நேற்று மணல் கடத்தல் கும்பல் குறித்து விசாரணையில் ஈடுபட்டனர்.
ஒரு வாகனத்தில் மணல் கடத்திய சண்முகபுரம் சங்கர் 24, டிரைவர் மணிகண்டன் 23 ஆகியோரை போலீசார் பிடித்தனர். அப்போது அவர்கள் அரிவாளால் பார்த்திபனை வெட்ட முயற்சித்தனர். அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

துாத்துக்குடியில் இருவர் கொலைதுாத்துக்குடி: துாத்துக்குடி சின்னகண்ணுபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் 45. இவர் நேற்று மாலை 4:30 மணிக்கு நடந்து வந்த போது குறிஞ்சிநகரை சேர்ந்த முருகன் 50, அவரது மகன் சரவணன் 25, கடுமையாகத் தாக்கி கொலை செய்தனர். ஜெயக்குமார் டூவீலரை அடகு வைத்து முருகனிடம் ரூ. 5 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். அந்த வாகனம் வேறு ஒருவருக்கு சொந்தமானது என தெரியவந்ததால் தாக்கியுள்ளனர். குற்றவாளிகளை சிப்காட் போலீசார் தேடி வருகின்றனர்.
துாத்துக்குடி ராஜகோபால்நகரை சேர்ந்தவர் பெரியநாயகம் 60. நேற்று மாலை 5:30 மணிக்கு பாரதிநகரில் டூவீலரில் வந்தபோது ஒரு கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிக்கொலை செய்தது. சிப்காட் போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

உலக நிகழ்வுகள்:மதரசாவில் குண்டு வெடிப்பு: 10 மாணவர்கள் பரிதாப பலிகாபூல்: ஆப்கானிஸ்தானில், வடக்கு சமங்கன் மாகாணத்தின் தலைநகரான அய்பக்கில் இஸ்லாமிய மதக் கல்வி போதிக்கப்படும் மதரசா பள்ளி உள்ளது. இங்கு, நேற்று நடந்த குண்டு வெடிப்பில், 10 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர்; பல மாணவர்கள் காயமடைந்தனர்.வாசகர் கருத்து (23)

 • s. mohan -

  62 வருட சிறைவாசம் என்பது மக்களின் வரிப்பணத்தில் அவன் குளிர் காய்வான் சொகுசு வாழ்க்கை, கறி மீன் சாப்பாடு என்று. அவனுக்கு அரபு நாட்டில் கொடுக்கும் தண்டனையை போல் பொது இடத்தில் நிற்கவைத்து கல்லால் அடித்து கொல்லவேண்டும். இந்த தண்டனை அவனுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியர் அனைவர்க்கும் சேர்த்து இருக்க வேண்டும்.

 • மனிதன் - riyadh,சவுதி அரேபியா

  ஹக்கீமும் ,காளிதாசனும், குற்றவாளிகள்தான்...பீஹாரில ஒருத்தன மூணு தோப்புக்கரணம் போட வெச்சாங்களே அவன் என்ன மதம்??? தவறு செய்பவர்கள் அணைத்து மதத்திலும் உண்டு... அதென்ன ஒருத்தனை மட்டும் மதத்தோடு சம்பந்தப்படுத்துவது...கேவலமான எண்ணங்கள்,கேவலமான ஜென்மங்கள்...

  • RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ

   ஆனா ஹிந்துவாவை நாம சம்பந்தப்படுத்தலாம் .....

 • DVRR - Kolkata,இந்தியா

  1) எனது வரிப்பணம் ஏன் வேஸ்ட் செய்யப்படுகின்றது இவனுக்காக , Blunder seen Shoot him இதை செய்திருந்தால் இந்த 62 வருட சிறைசெலவு அனாவசியம்

 • V. Rajamohan -

  தொடர்ந்து அந்த கொலைகாரன் கவிதாஸ் சுதந்திரமாக கொலைகள் செய்ய வெளியே அனுப்பிய, அவன் மீது உள்ள வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் தான் பொறுப்பு. நீதி துறை அந்த நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 • S.Baliah Seer - Chennai,இந்தியா

  அதற்குப்பதிலாக அவனுக்கு ration செய்திருக்கலாமே.அவன் சாகும்வரை எதற்கு தண்டச்சோறு போடவேண்டும். எத்தனையோ மக்கள் கஞ்சிக்கு கதறும்போது இவனைப்போன்ற காவாளிகளுக்கு மூன்றுவேளை சோறு ஒரு கேடா.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

ஸ்ரீபெரும்புதூரில் சொந்த மனை வாங்க சரியான நேரம் வந்தாச்சு!

Advertisement
 
Advertisement