ஜல்லிக்கட்டு தடை வழக்கு :உச்ச நீதிமன்றம் கேள்வி
புதுடில்லி, மிருகவதை என்று பலராலும் கூறப்படும் ஜல்லிக்கட்டு போட்டியை எந்த சூழ்நிலையிலாவது நடத்துவதை அனுமதிக்கலாமா, கூடாதா என்பதை இறுதிக் கேள்வியாக முன்வைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஜல்லிக்கட்டு போட்டி நடத்த 2014ல் உச்ச நீதிமன்றம் தடை விதித்த நிலையில், தமிழக அரசு அவசர சட்டம் இயற்றி 2017 முதல் போட்டியை நடத்தி வருகிறது.
ஜல்லிக்கட்டு போட்டி நடத்த 2014ல் உச்ச நீதிமன்றம் தடை விதித்த நிலையில், தமிழக அரசு அவசர சட்டம் இயற்றி 2017 முதல் போட்டியை நடத்தி வருகிறது.
இந்த அவசர சட்டத்தை எதிர்த்து, 'பீட்டா' உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளன. இந்த மனுக்களை, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது. நேற்றைய விசாரணையின் போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் வாதிடுகையில், ''அவசர சட்டம் இயற்றிய தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டியை தொடர்ந்து நடத்தி வந்தாலும், கள எதார்த்தத்தில் காளை துன்புறுத்தலுக்கு ஆளாவதில் மாற்றம் இல்லை,'' என்றார்.
இதை கேட்ட நீதிபதிகள், மிருகவதை என பலராலும் கூறப்படும் ஜல்லிக்கட்டை எந்த நிலையிலாவது நடத்தலாமா, அதற்கு அனுமதி அளிக்கலாமா அல்லது ஜல்லிக்கட்டை எந்த சூழ்நிலையிலும் நடத்த முடியாதா என்பதை இறுதி கேள்வியாக முன்வைப்பதாக தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்