ADVERTISEMENT
தண்டையார்பேட்டை, சென்னை, தண்டையார்பேட்டை, மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில், 55; மீனவர். இவரது மனைவி செல்வி உடல்நிலை சரியில்லாமல், 12 ஆண்டுகளுக்கு முன் இறந்தார்.
இவர்களின் மகள் ரஞ்சிதா, 29, மகன் ராஜி, 27. ராஜி பூக்கடையில் தள்ளுவண்டியில் சிற்றுண்டி கடை நடத்தி வந்தார். இந்நிலையில், தன் 15வது வயதில் தாய் செல்வி இறந்ததை மறக்க முடியாத மகன் ராஜி, அவ்வப்போது தன் நண்பர்கள், உறவினர்களிடம் புலம்பி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக தன் தாயின் நினைவாக இருந்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு, வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் துாங்கிய நிலையில், ராஜி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இறப்பதற்கு முன் 'தாய் தன்னை அழைப்பதாகவும், தாயை பார்க்க வேண்டும்' எனவும், இன்ஸ்டாகிராமில் ராஜி உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
தண்டையார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!