ஊராட்சி தலைவருக்கு கண்டனம்: அலுவலகம் முன் தர்ணா போராட்டம்
மேட்டுப்பாளையம்;கிராம சபை தீர்மான நகல் கொடுக்காத பெள்ளாதி ஊராட்சி தலைவரை கண்டித்து, தி.மு.க.,வினர் ஊராட்சி அலுவலகம் முன் தர்ணா போராட்டம் நடத்தினர்.
காரமடை ஒன்றியம், பெள்ளாதி ஊராட்சிக்குட்பட்ட குரும்பபாளையத்தில், சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், வரும் நிதியாண்டில் தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில், என்னென்ன பணிகள் செய்வது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்துக்கு ஊராட்சி தலைவர் பூபதி குமரேசன் தலைமை வகித்தார். அரசு பற்றாளராக தீனதயாளன் பங்கேற்றார். துணை தலைவர் அமுதா, வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.காலை, 11:00 மணிக்கு துவங்கிய கூட்டம், 11:45 மணிக்கு நிறைவடைந்தது. இதில், 48 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. ஊராட்சி செயலர் தங்கவேல் நன்றி கூறினார்.இந்நிலையில் தி.மு.க., மாவட்ட பிரதிநிதி முருகேசன் மற்றும் கட்சியினர், சிறப்பு கிராம சபை கூட்டம் ஐந்து நிமிடத்தில் முடிந்தது. தீர்மான நகல் கேட்டால், ஊராட்சி தலைவர் கொடுக்கவில்லை; 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வருவது குறித்து புகார் சொன்னால் எழுத்து வாயிலாக கொடுக்க சொல்கிறார். ஊராட்சியில் லே-அவுட் அனுமதி வழங்கியதில் பல முறைகேடுகள் நடந்துள்ளன. இதனால் சிறப்பு அதிகாரிகள் குழு நியமித்து ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.காரமடை போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, எழுத்து பூர்வமாக புகார் அளிக்க அறிவுறுத்தினர். அதன்பின் தர்ணா போராட்டத்தை கைவிட்டனர்.ஊராட்சி தலைவர் பூபதி குமரேசன் கூறுகையில், 'சிறப்பு கிராம கூட்டம், 45 நிமிடங்கள் நடந்தன. பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. தீர்மான நகல் வேண்டுவோர் எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்தால் அந்த நகல் அடுத்த கிராம சபை கூட்டத்தில் வழங்கப்படும். ஊராட்சியின் மக்கள் தொகை, 20 ஆயிரமாகும். குடிநீர் வடிகால் வாரியம் நாள் ஒன்றுக்கு ஐந்து லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே வழங்குகிறது. இதனை சுழற்சி முறையில் வழங்கும்போது, 8 முதல் பத்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. லேஅவுட் அங்கீகாரம் சென்னையில் நடப்பதால், ஊராட்சியில் எவ்வித முறைகேடும் நடக்கவில்லை," என்றார்.அரசு பணிகளை செய்யவிடாமல் தடுத்து, தர்ணா போராட்டம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஊராட்சி தலைவர் காரமடை போலீசில் புகார் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!