உண்ணாவிரதத்தில் தீக்குளிக்க முயற்சி
அன்னுார்;அன்னுாரில் உண்ணாவிரத பந்தலில் தீக்குளிக்க முயற்சித்தவரை போலீசார் மீட்டனர்.கோவை, அன்னுார் மற்றும் மேட்டுப்பாளையம் தாலுகாக்களில், 3,864 ஏக்கரில் தொழில் பூங்கா அமைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று அன்னுார்-ஓதிமலை ரோட்டில் 'நமது நிலம் நமது' அமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.அப்போது அங்கு அமர்ந்திருந்தவர்களில் ஒருவர் திடீரென பாட்டிலில் இருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு தீ பற்ற முயன்றார். அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை மீட்டு, அவர் மீது தண்ணீர் ஊற்றி, அன்னுார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில், திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லுார் பாலசுப்பிரமணியம் மகன் கார்த்திகேயன், 42 என தெரியவந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!