குட்கா விற்றால் கடும் நடவடிக்கை
போரூர் சென்னை வளசரவாக்கம் மண்டலம், 150வது வார்டு காரம்பாக்கத்தில், சென்னை மாநகராட்சி மற்றும் ருத்ரா மனோ விழுதுகள் தொண்டு அறக்கட்டளை இணைந்து, காரம்பாக்கம் வியாபாரிகளுக்கு இலவச இரட்டை குப்பைக்கூடை வழங்கும் விழா நேற்று நடந்தது.
போரூர் வட்டார நாடார் சங்க மண்டபத்தில் நடந்த விழாவில், மதுரவாயல் எம்.எல்.ஏ., கணபதி மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா ஆகியோர் பங்கேற்று, குப்பை
போரூர் வட்டார நாடார் சங்க மண்டபத்தில் நடந்த விழாவில், மதுரவாயல் எம்.எல்.ஏ., கணபதி மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா ஆகியோர் பங்கேற்று, குப்பை
தொட்டிகள் வழங்கினர்.
பின், விக்கிரமராஜா கூறியதாவது:
குப்பையை தரம் பிரித்து வழங்குவதை வலியுறுத்தும் விதமாக, வியாபாரிகளுக்கு இரு குப்பை தொட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை வியாபாரிகள் விற்பனை செய்யக் கூடாது.
இதை மீறி விற்பனை செய்யும் வியாபாரிகள் யாராக இருந்தாலும், சங்க அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவர்.
இவ்வாறு அவர்
கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!