காங்.,கில் இணைந்த பா.ஜ., மாஜி மந்திரி
ஆமதாபாத் :குஜராத்தில் பா.ஜ., ஆட்சியில் அமைச்சராகவும் கட்சியின் மூத்த தலைவராகவும் இருந்த ஜெய்நாராயண் வியாஸ், காங்கிரஸ் கட்சியில் நேற்று இணைந்தார்.குஜராத்தில் 2007 - 2012 வரைநரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் குடும்ப நலத்துறை அமைச்சராக இருந்தவர் ஜெய்நாராயண் வியாஸ், 75. இதற்குப் பின், 2012 மற்றும் 2017ம் ஆண்டுகளில் நடந்த சட்டசபை தேர்தல்களில் அவர் தோல்வி அடைந்தார்.
வரும் டிசம்பர் 1 மற்றும்5ம் தேதிகளில் நடக்கும்குஜராத் சட்டசபை தேர்தலில் வியாசுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதையடுத்து, அவர் சமீபத்தில் கட்சியில் இருந்து விலகினார்.இந்நிலையில், ஜெய்நாராயண் வியாஸ், அவரது மகன் சமீர் வியாஸ் இருவரும், நேற்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இருவரையும் வரவேற்றார். காங்.,கில் இணைந்தது பற்றி ஜெய்நாராயண் வியாஸ், கூறுகையில், ''பா.ஜ., ஆலமரமாக வளர்ந்து விட்டது. இதன் கீழ் எந்த செடியும் வளர முடியாது,'' என்றார்.
வாசகர் கருத்து (8)
இன்னொரு முதியவர் காங்கிரஸ்ஸில் அடக்கம் காங்கிரஸ்ஸில் இப்போதிருக்கும் முதியவர்களுடன் புது முதியவர் ஊன்றுகோல் மாத்திரை பைகளுடன் அடிமை வரிசையில் சேர்ந்து விட்டார். வாழ்க, வளர்க அவர் தொண்டு.
அங்க இல்லனா இங்க / இங்க இல்லனா அங்க
பாவம் இதுவே காங்கிரஸ் ஆளு உங்க கட்சியில் சேர்ந்தா அவர் ரொம்ப நல்லவர்.. உங்க ஆளு போனா கேட்டவர்..
தோல்வி என்றால் வேறு கட்சியில் இருந்து போட்டியிட்டால் பாஜக அந்தத் தொகுதியை தக்கவைக்க 200% முயலும்...
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
குஜராத்தில் பாஜக என்கிற ..... காங்கிரஸ் என்ற பாலைவனத்தில் எப்படி வளர முடியுமென்று நினைக்கிறாரோ