Advertisement

சுவாமிக்கு சிறப்பு சங்காபிேஷகம்

பொள்ளாச்சி, உடுமலை சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில் கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பொள்ளாச்சி ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு, காலை, 7:00 மணிக்கு ஆவாஹனம், ருத்ரஜப ேஹாமம், மஹா பூர்ணாஹுதி, தீபாராதனை உள்ளிட்ட பூஜைகளும்; மாலை, 4:00 மணிக்கு, ராமலிங்கேஸ்வரருக்கு, 1008 சங்காபிேஷகம், தீபாராதனை மற்றும் அன்னதானம் வழங்குதல் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், சுந்தரேஸ்வரருக்கு, 108 சங்காபிேஷக விழா நடந்தது. சிறப்பு அலங்காரம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.மாகாளியம்மன் கோவிலில், 108 சங்காபிேஷக பூஜை நேற்று மாலை, 6:00 மணிக்கு நடந்தது. தொடர்ந்து, சகஸ்ரநாம அர்ச்சனை, மகா தீபாராதனை நடந்தது. ருத்ரலிங்கேஸ்வரர், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தங்கக்கவச அலங்காரத்தில் ஜோதிலிங்கேஸ்வரர் அருள்பாலித்தார்.பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுப்பகுதியிலுள்ள கோவில்களில், சோமவார விழாவை முன்னிட்டு, சிறப்பு சங்காபிேஷக வழிபாட்டில், பக்தர்கள் திரளாக பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். விரதம் இருந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
வால்பாறை
வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் சன்னதியில், மாலை, 6:00 மணிக்கு கார்த்திகை மாதம் சோமவாரத்தை முன்னிட்டு, காசிவிஸ்வநாதருக்கு, 308 சங்குகளால் சிவலிங்க வடிவில் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு யாக பூஜை நடந்தது. பூஜைக்கு பின் பக்தர்கள் புனித நீரை கையில் ஏந்தி கோவிலை மூன்று முறை வலம் வந்தனர். அத-ன்பின் சங்காபிேஷக பூஜையும், சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. விழாவில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, சிவபெருமானை தரிசித்தனர்.
உடுமலைஉடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. அதன்பின், 108 வலம்புரி சங்குகள் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது.இந்நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்தனர். இதே போல், சோமவாரபட்டி அமரபுயங்கீஸ்வரர் கோவில் உட்பட பல்வேறு கோவில்களில் சங்காபிேஷகம் நடந்தது. - நிருபர் குழு -



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement